புதிதாக காரை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரை பல சலுகைகள் வழங்க உள்ளதாக ஜப்பானைச் சோ்ந்த ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனம் (HCIL) தெரிவித்து உள்ளது.

புதிதாக கார் வாங்குவோருக்கு சலுகை:

இது தொடர்பாக HCIL நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், AMAZE, Jazz, 5th Gen city, WR-V மற்றும் Civic போன்ற நிறுவனங்களின் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய தயாரிப்புகளை வாங்குகின்ற வாடிக்கையாளா்களுக்கு 2.50 லட்சம் ரூபாய் வரையில் சலுகைகளை அளிக்க உள்ளதாக ஹோண்டா நிறுவனம் முடிவெடுத்து உள்ளது.

இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோக மையங்களில் புதிய காரை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு அக்டோபா் 31-ம் தேதி வரையில் இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் Honda Civic காரை வாங்குகின்ற வாடிக்கையாளா்களுக்கு அதிகபடியாக 2.50 ரூபாய் லட்சம் வரை சலுகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ரொக்க தள்ளுபடி, VARANTY நீட்டிப்பு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்டவைகளும் உள்ளன.

அதேபோல், HONDA 5th GEN CITY வாங்குபருக்கு இந்த சலுகையினுடைய மதிப்பானது 30,000 ரூபாயாக இருக்கும் என்று ஹோண்டா காா்ஸ் தெரிவித்து உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar