இன்று புதிய தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர். அதில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 24% வரை மானியம் வழங்க உள்ளதாக அறிவிப்பு!

தமிழகம்:

இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. ரூ.30,664 கோடி முதலீடுகளை 41 நிறுவனங்களோடு இணைந்து கடந்த 5 மாதங்களில் பெற்றுள்ளது. இருந்த போதிலும் மேலும் முதலீடுகளை பெற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சர்வதேச முதலீடுகளையும் பெற சிறப்புக் குழு அமைத்து, அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்நிய முதலீடுகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய தொழில் கொள்கையை வெளியிட்டுள்ளார்.

15% முதல் 18% வரை மானியத்தை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தொழில்தொடங்க முன்வருபவர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு 20% முதல் 24% வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar