இந்தியா சமையல் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய், வெளிநாட்டு இறக்குமதியை அதிக அளவில் நம்பியுள்ள காரணத்திணால் சர்வதேச சந்தைகளில் ஏற்படுகின்ற விலை மாற்றம் ஆனது இந்தியச் சந்தையை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

மலேசியாவில் பாமாயிலின் உற்பத்தி ஆனது குறைந்துள்ள காரணத்திணால் இந்தியாவில் இறக்குமதியின் அளவானது குறைந்து சமையல் எண்ணெய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சமையல் எண்ணெயின் விலையானது 20% முதல் 30% வரை உயர்ந்து உள்ளது.

இதே போல, கச்சா எண்ணெயின் நிறுவனங்கள் அதிக அளவிலான லாபமும் வருமானமும் பெறுவதற்காக உற்பத்தி அளவீடை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலையானது அதிகரித்து உள்ளது.

டீசல், பெட்ரோல் விலை உயர்வு:

சர்வதேச சந்தையில் எதிரொலியின் காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்கின்ற கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், சுத்திகரிப்புச் செலவு, போக்குவரத்து செலவு போன்றவை அதிகரித்து மக்களின் பயன்பாட்டுக்கு வருகின்ற டீசல், பெட்ரோலின் விலை ஆனது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாய் டீசல் மற்றும் பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் சராசரியாக 1 லிட்டர் பெரட்ரோலின் விலையானது கடந்த மூன்று நாட்களாய் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் அதிக அளவிலான சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

டீசல் விலையின் இந்தத் தொடர் உயர்வால் போக்குவரத்துத் துறை அதிக அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்டு உள்ள தொடர் வளர்ச்சி தான் இதன் முக்கியக் காரணம் ஆகும்.

Author – Gurusanjeev Sivakumar