இந்தியாவின் நிலக்கரி இறக்குமதியானது 11.6% அதிகரித்து, 19.04 மில்லியன் டன் ஆக செப்டம்பர் மாதத்தில் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையானது இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வருகின்ற அறிகுறியாக கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இது 17.06 மில்லியன் டன் ஆகத் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பண்டிகை காலத்திற்கு முன்பாக இந்த தேவையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வரவுள்ள மாதங்களின் செயல்பாட்டு நிலைத் தன்மை மற்றும் நுகர்வுத் துறைகளினுடைய வளர்ச்சியைப் பொறுத்தது என்பதன் காரணத்தால், இறக்குமதியானது மேலும் நிலையற்றதாக இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் மொத்த இறக்குமதியில் குக்கிங் இல்லாத நிலக்கரியின் ஏற்றுமதி ஆனது 11.97 மில்லியன் டன் ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் இதே மாதத்தில் 11.81 மில்லியன் டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், குக்கிங் நிலக்கரி ஆனது கடந்த நிதி ஆண்டில் 3.54 மில்லியன் டன் ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 4.58 மில்லியன் டன் ஆக அதிகரித்து உள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில் நிலக்கரியின் இறக்குமதி ஆனது அதிகரித்து இருந்தாலும், கடந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் இந்தியாவினுடைய நிலக்கரி இறக்குமதியானது 125.35 மில்லியன் டன் ஆக இருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 95.30 மில்லியன் டன் ஆக குறைந்து உள்ளது.

நடப்பு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாத காலத்தில் மொத்த நிலக்கரி மற்றும் அதன் குக்கிங் இறக்குமதியானது 95.30 மில்லியன் டன் ஆக குறைந்து உள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 23.97 ஆக குறைந்துள்ளது.

கோவிட்-19 தொற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாய் சரிவில் இருந்த நிலக்கரியின் ஏற்றுமதியானது, இப்போது தான் உயர ஆரம்பித்துள்ளது. இந்த நிலையானது கோவிட்-19 க்கு முன்னர் இருந்தது போல மாற மேலும் சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar