சென்னையில் தொழில் உரிமம் புதுபிப்பதற்கு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியை சேர்ந்த பகுதிகளில் தொழில் அதிபர்கள், வணிகர்கள் தங்களின் தொழில் உரிமத்தினை புதுபிப்பதற்கு கால அவகாசம் கடந்த மார்ச் 31-ம் தேதி உடன் முடிவடைந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரையில் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், மாநகராட்சி வருவாய்த்துறை மூலமாக நிறுவனங்களின் தொழில் உரிமமானது 2020-2021 ஆம் நிதி ஆண்டில் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் புதுப்பிப்பு செய்திருக்க வேண்டும்.

ஆனால், கொரோனா தொற்றின் பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளதால், தொழில் உரிமத்தினை புதுப்பிக்க எந்தவித அபராதமும் இல்லாமல் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கூறியுள்ளார்.

Author – Gurusanjeev Sivakumar