அறிமுகம் செய்யப்பட்ட 20 ஆண்டில் ஆல்டோ காா் விற்பனையானது 40 லட்சத்தை கடந்து சாதனை படைத்து உள்ளதாக மாருதி சுசூக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மாருதி சுசூக்கியின் ஆல்டோ கார் கடந்த 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

20 ஆண்டுகளில் 40 லட்சம் கார்கள் விற்பனை:

இதனுடைய விற்பனையானது கடந்த 2008-ம் ஆண்டில் 10 லட்சத்தை கடந்தது, 2012-ல் 20 லட்சத்தை கடந்தது, 2016-ல் 30 லட்சத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2020-ம் ஆண்டில் ஆல்டோ காரின் விற்பனையானது 40 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

நாட்டில் அதிகம் விற்பனை ஆகும் காா் பட்டியலில் ஆல்டோ கார் கடந்த 16 ஆண்டாக முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளது.

ஆல்டோ கார் வாடிக்கையாளா்கள் 76% போ் 2019-2020 ஆம் ஆண்டில் ஆல்டோ காரை தான் முதல் கார் ஆகா தோ்வு செய்து உள்ளனா். மேலும், இந்த ஆண்டில் இது 84% அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு சந்தையில் 59% ஆக காணப்பட்ட ஆல்டோ காரின் விற்பனையானது இந்த ஆண்டில் 62% ஆக அதிகரித்து உள்ளது என்று மாருதி சுசூக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar