• India
```

அமெரிக்காவிடம் பணிந்தது உக்ரைன்...கனிமவள ஒப்பந்தத்தில்...நாளை கையெழுத்து இடுகிறார் ஜெலன்ஸ்கி...!

Ukraine Agrees To US Minerals Deal

By Ramesh

Published on:  2025-02-27 11:29:38  |    149

Ukraine Agrees To US Minerals Deal - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்காவின் கனிமவள ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்து இடுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் ஆன போர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளுமே பெரும் பொருளாதார இழப்பை தினம் தினம் சந்தித்து வருகின்றன, இரு நாடுகளுமே போர் நிறுத்தத்தை முன்னெடுக்காததால் போரின் திசை ஆனது நிற்பதை நோக்கி செல்லவே இல்லை, ரஷ்யாவும் போர் நிறுத்தத்திற்கு உடன் படுவதாக இல்லை.

பொதுவாக ஐரோப்பிய நாடுகள் தான் உக்ரைனின் பக்கம் நின்று இருக்க வேண்டும், ஆனால் அமெரிக்கா போர் ஆரம்பித்ததில் இருந்து ட்ரம்பிற்கு முன்னதான ஆட்சி வரை உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி பல உதவிகளை செய்து வந்தது, இதனால் அமெரிக்காவிற்கு என்ன ஆதாயம் என்று கேட்டால் உக்ரைனில் இருக்கும் கனிம வளம் தான் அமெரிக்கா உக்ரைன் பக்கம் நிற்க காரணம் ஆக கூறப்படுகிறது.



அது தான் உண்மையும் கூட, ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது, அமெரிக்கா இதற்கு அப்புறம் உக்ரைனின் பக்கம் நிற்க வேண்டுமானால் அதற்கு உக்ரைனில் இருக்கும் கனிம வளங்களை அமெரிக்கா எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என ட்ரம்ப் நிபந்தனை விடுத்தார், ஆனால் முதலி ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணியவில்லை.

ஆனால் ட்ரம்ப் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து, உக்ரைனை பயமுருத்தி ஒரு வழியாக கனிம வள ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கியை கையெழுத்திட ஒப்புதல் வாங்கி விட்டார், நாளை ஜெலன்ஸ்கி இந்த கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் பட்சத்தில், இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக களம் இறங்க வாய்ப்பு அதிகம் ஆகும் என கூறப்படுகிறது.

" தேர்தலின் போது போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என் முன்மொழிந்த ட்ரம்ப், மாறாக ஜெலன்ஸ்கியை தன் கட்டுக்குள் கொண்டு வந்து, போரின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்துகிறார் என்கின்றனர் உலகவியாளர்கள் "