Flaws In New Pamban Bridge - பிரசித்திபெற்ற புனித தலம் மற்றும் சுற்றுலாத் தளம் ஆகவும் அறியப்படும் இராமேஸ்வரத்திற்கு தினமும் இலட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர், இராமேஸ்வரத்தில் இருக்கும் பாம்பன் பாலம் என்பது மிகவும் பழமையானது மற்றும் புகழ்பெற்றது, நூறு வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வந்த பாலத்தில் கடந்த அதிர்வுகள் அதிகமாக இருப்பதாக புகார் வந்தது.
இதனால் பாம்பன் பாலத்தின் மீதான இரயில் சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது, புதிய பாலத்தின் கட்டுமானங்கள் 2020 யில் துவங்கப்பட்ட நிலையில் இயற்கை பேரிடர், கோவிட் என பல காரணங்களால் கட்டி முடிப்பதற்கு கிட்டதட்ட நான்கு வருடங்கள் ஆகி விட்டது, கடந்த அக்டோபரில் பணிகள் நடந்து முடிந்த நிலையில் இரயில் சோதனை ஓட்டமும் புதிய பாலத்தின் மீது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் புதிய பாம்பன் பாலத்தை முழ்வதுமாக ஆய்வு செய்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்து இருக்கிறார், அந்த அறிக்கையில் புதிய பாம்பன் பாலத்தில் இருக்கும் பல குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன, அழுத்தத்தை சுமக்கும் திறன் என்பது புதிய பாலத்தில் 36% மட்டுப்பட்டுத்தப்பட்டு இருக்கிறதாம். முறையான ஆய்வுக்குழுவின் அனுமதியே பெறவில்லையாம்.
பாலத்தின் வெல்டிங் திக்னஸ் என்பது மோசமாக உள்ளதாகவும், பாலத்தில் பயன்படுத்தப்பட்டு இரும்புகள் கடலினால் அரிப்பிற்கு உள்ளாகலாம் எனவும் ஆணையரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது, வெகுவிரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பாம்பன் பாலத்திற்கு தற்போது ரயில்வே ஆணையரின் அறிக்கையால் சிக்கல் வந்து இருக்கிறது, இதனால் 5 பேர் கொண்ட குழு மீண்டும் ஆய்வை துவங்கி இருக்கிறது.