UGC New Rule For UnderGraduate - நாம் சிறு வயதில் ஒழுங்காக படிக்கவில்லை எனில் அரை கிளாஸ்சிலேயே மீண்டும் மீண்டும் சேர்த்து படிக்க வைப்பர், அதே சமயத்தில் நாம் அரை கிளாஸ்சை நன்றாக படித்தால் உடனடியாக ஒன்றாம் கிளாஸ்சுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள், அதாவது மாணவர்களின் திறனை பொறுத்து அவர்களுக்கு படிப்பை வழங்குவது, அல்லது அவர்களை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது.
இதையே தான் தற்போது யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனும் (UGC) யோசித்து இருக்கிறது, அதாவது ஒரு சிலரால் நான்கு வருட படிப்பை மூன்று வருடத்தில் முடித்து விட இயலும், ஒரு சிலரால் மூன்று வருட படிப்பை படித்து முடிக்க நான்கு வருடம் ஆகலாம், அதிவேகமாக கற்றுக் கொள்ளும் திறன் உடையவர்களால், அதிக நேரத்தில் கற்றுக் கொள்ளும் திறன் உடையவர்களுடன் போராட முடியாது.
மாணாக்கர்களின் இந்த நிலையை கருத்தில் கொண்டு, மாணாக்கர்களுக்கு ஏற்றார் போல அவர்களே அவர்களது இளங்கலை படிப்பிற்கான கால அளவை முடிவு செய்யும் வகையில், துரிதப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் மற்றும் விரிவாக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம் என இரண்டு திட்டங்களுக்கு யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் அதிவேகமாக பட்டபடிப்பை முடிக்கும் திறன் கொண்டவர்கள் அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பை அவர்கள் நினைக்கும் கால அளவிற்குள் முடித்துக் கொள்ள இயலும், கொஞ்சம் புரிந்து கொள்ள நேரம் எடுப்பவர்கள் தங்களது பட்டப்படிப்பை ஒரு வருடம் நீட்டித்து கொஞ்சம் ஆழமாக பாடப்பிரிவினை படித்துக் கொள்ள இத்திட்டம் வழி வகுக்கும்.