• India
```

பணியாரம் கடை...தினசரி 3 மணி நேரம் போதும்...மாதம் ரூ 15000 வருமானம் பார்க்கலாம்...!

Paniyaram Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-23 09:12:29  |    492

Paniyaram Shop Ideas Tamil - பணியாரம் கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Paniyaram Shop Ideas Tamil - என்ன தான் மார்க்கெட்டில் வித்தியாசம் வித்தியாசம் ஆக பல தின்பண்டங்கள் வந்தாலும் கூட, பழைய காலத்து தின்பண்டங்கள்க்கு இன்னும் சந்தைகளில் மதிப்பு இருக்க தான் செய்கிறது, அந்த வகையில் ஆப்பம், போலி, பணியாரம், அவுள், இனிப்பு பொறி உள்ளிட்ட பல தின் பண்டங்கள் மார்க்கெட்டுகளிலும் தெருவோரக்கடைகளிலும் அதிக விற்பனையை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் பணியாரக் கடை வைத்து ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பெரிய முதலீடு ஏதும் தேவைப்படாது, ஆனால் விற்பனைக்கு சரியான மார்க்கெட் அல்லது மக்கள் கூடும் இடத்தை தேர்ந்து எடுப்பது மிக மிக அவசியம், கடைகள் இல்லை என்றால் கூட ஒரு தள்ளு வண்டியில் கூட இந்த பணியாரக்கடையை ஆரம்பிக்கலாம்.



சீனி பணியாரம், மண்டவெல்ல குழி பணியாரம், கருப்பட்டி குழி பணியாரம், எம்டி பணியாரம் வித் சட்னி, ரவை பணியாரம், காரப்பணியாரம் உள்ளிட்ட பல வகைகளில் பணியாரம் செய்து விற்கலாம், காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் பணியார விற்பனையை மேற்கொள்ளலாம், முக்கியமாக மாலை நேரங்களில் தான் மக்கள் தின்பண்டங்களை அதிகம் தேடுவார்கள்.

அந்த வகையில் மாலை ஒரு 3 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை சூடாக அப்படியே பணியாரத்தை போட்டு போட்டு விற்றால் விற்பனை களைகட்டும், ஒரு பணியாரத்தின் விலை ரூ 5 முதல் 15 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, ஒரு மூன்று மணி நேரம் விற்பனையில் தினசரி ரூ 500 முதல் 700 வரை வருமானம் ஈட்டலாம், மாதம் சராசரியாக ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம்.

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas