• India
  • May 25, 2025 at 10:54:22 PM
```

டாலர் கயிறு தயாரிப்பு...500 ரூபாய் முதலீட்டில்...மாதம் ரூ 15000 வரை வருமானம்...!

Hand Thread Making Business

By Ramesh

Published on:  2025-01-28 08:14:13  |    479

Hand Thread Making Business - வீட்டில் இருந்தே டாலர் கயிறு தயாரித்து எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Hand Thread Making Business - பொதுவாக கோவில்களில், பேன்ஸி கடைகளில் எல்லாம் டாலர் கயிறுகள் மற்றும் கையில் கட்டும் கயிறுகளுக்கான தேவை இருக்கிறது, கோவில்களுக்கு அர்ச்சனை செய்தாலே பிரசாதத்தோடு கோவில்களில் கையில் கட்டும் கயிறையோ, டாலர் கயிறையோ வழங்குவார்கள், ஒரு சிலர் ஸ்டைலுக்காக கையில் கட்டும் கயிறுகளை அணிவது உண்டு.

அந்த வகையில் இந்த சிறிய சந்தையை சரியாக தேர்ந்து எடுத்து இந்த கயிறுகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், பொதுவாக இந்த கயிறுகளை மொத்த விலையில் முதலில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு நான்கைந்து கலர்கள் தான் வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்படும்.



சரியாக கலர்களை தேர்ந்தெடுத்து வாங்கி வைத்துக் கொள்வது நல்லது, வாங்கிய கயிறை கொஞ்சம் பிளைன் கயிறுகளாகவும் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும், பின்னல் ஊசி ஒன்று வாங்கி கயிறுகளை கொஞ்சம் பின்னியும் வைத்துக் கொள்ளலாம், ஒரு சிலர் கைகளாகவே கூட பின்னி விடுவார்கள், ஒரு கயிறு செய்ய ஆகும் செலவும் என்பது வெறும் 75 காசுகள் தான்.

நீங்கள் அதை மொத்த விலைக்கு 7 ரூபாய்க்கு கொடுக்கலாம், கடைகளில் 10 ரூபாய்க்கு விற்பார்கள், டாலரோடு விற்கப்போகிறீர்கள் என்றால், ஒரு டாலர் 3 ரூபாய் வரும், கயிறோடு சேர்த்து விற்கும் போது 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்கிறார்கள், ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு 100 கயிறுகளை சந்தைப்படுத்தினால் கூட மாதம் சராசரியாக ரூ 15,000 வரை வருமானம் பார்க்கலாம்.

" சரியான சந்தை என்பது இந்த தொழிலில் முக்கியம், கோவில்கள், கோவில்களை சுற்றி இருக்கும் கடைகள், பேன்சி ஸ்டோர்கள் இந்த 3 மார்க்கெட்டை பிடித்தாலே போதும், இத்தொழிலில் உச்சம் பெறலாம் "

Business Ideas in Tamil Nadu
Small Business Ideas