• India
```

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி!! இதோ முழு விவரம்..

indian rupee downfall

By Dhiviyaraj

Published on:  2025-01-14 08:37:57  |    231

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்து இருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டின் மதிப்பு வரலாறு  காணாத அளவுக்கு சரிவை சந்தித்து இருக்கிறது. கடந்த திங்கள் கிழமை அன்று (ஜனவரி 13)ரூபாயின் மதிப்பு சுமார் ரூ 86-70 வரை சரிந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் இது  தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், "நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, அவர் பதவியேற்ற  சமயத்தில் அவருக்கு வயது 64 இருந்தது. அப்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ 58 இருந்தது.

ரூபாய் மதிப்பினை வலுவாக்குவதாக மோடி சொற்பொழிவாற்றினார். காங்கிரஸ் ஆட்சி செய்த ஆண்டுகளும் தற்போது  சரிந்த ரூபாய் மதிப்பும் ஒன்றாக இருக்கிறது என்று எக்ஸ் தளத்தில் கிண்டல் செய்து  இருக்கிறார். தற்போது இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.