Poorvika Diwali Offers 2024 - பூர்விகா நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு மொபைல் மற்றும் லேப்டாப்களுக்கு 12 சதவிகிதம் வரை இன்ஸ்டண்ட் தள்ளுபடி வழங்கி இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Poorvika Diwali Offers 2024 - பூர்விகாவின் அசத்தலான தீபாவளி ஆபர்கள் என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்டு பரிவர்த்தனைகளுக்கு என்ன என்ன ஆபர்?
தமிழகத்தில் இருக்கும் அனைத்து பூர்விகா ஷோரூம்களிலும் நீங்கள் HDFC வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் தீபாவளி ஆபரில் மொபைல் மற்றும் லேப்டாப் எடுக்கும் போது 12 சதவிகிதம் வரை Instant Discount வழங்கப்படுகிறது, TVS கிரெடிட் கார்டுகள் மூலம் மொபைல் மற்றும் லேப்டாப் எடுக்கும் போது 10 சதவிகிதம் வரை Instant Discount வழங்கப்படுகிறது,
ICICI வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் தீபாவளி ஆபரில் மொபைல் மற்றும் லேப்டாப் எடுக்கும் போது 7.5 சதவிகிதம் வரை Instant Discount வழங்கப்படுகிறது. இது போக Yes Bank, DBS Bank, HSBC Bank, Federal Bank கிரெடிட் கார்டு மூலம் தீபாவளி ஆபரில் மொபைல் மற்றும் லேப்டாப் எடுக்கும் போது 12 சதவிகிதம் வரை Instant Discount வழங்கப்படுகிறது.
வேறு என்ன ஆபர் இருக்கிறது?
EMI மூலம் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய் கொடுத்து மொபைலை எடுத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது, இது ஒரு சில மொபைல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, உங்களது கிரெடிட் ஸ்கோர் செக் செய்யப்பட்டு அது சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆபர் மூலம் 1 ரூபாய் மட்டும் பெறப்பட்டு EMI வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 24 மாதங்கள் வரைக்கும் No Cost EMI வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
பரிசுகள் ஏதும் உண்டா?
தமிழகத்தில் இருக்கும் அனைத்து பூர்விகா ஷோரூம்களிலும் ஐந்தாயிரத்திற்கு மேல் தீபாவளி ஆபரில் பர்சேஸ் செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் கார், பைக், டிவி, லேப்டாப் வெல்லும் வாய்ப்புகள் வழங்கி இருக்கிறது, கிட்ட தட்ட குலுக்கல் முறையில் பர்சேஸ் செய்தவர்கலில் 30 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுமாம். முக்கியமாக அனைத்து மொபைல், லேப்களும் ஆன்லைன் விலைக்கே தரப்படுகிறதாம்.