• India
```

இனி விமான நிலையங்களிலும்...மலிவான விலையில் உணவு மற்றும் பெவரேஜ்கள்...ஒன்றிய அரசின் புதிய திட்டம்...!

Government Plan To Make Affordable Airport Stores In Indian Airports

By Ramesh

Published on:  2024-11-11 22:20:38  |    211

Affordable Airport Stores - ஒன்றிய அரசு இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்களில் உணவு மற்றும் பெவரேஜ்களை மலிவான விலையில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறது.

Affordable Airport Stores - பொதுவாக உணவுகளும் சரி, பெவரேஜ்களும் சரி, டீயோ, காபியோ எதுவாக இருந்தாலும் சரி நாம் வெளியில் வாங்கும் விலையை விட ஏர்போர்ட்களில் விலை அதிகமாக தான் இருக்கும், ஒரு சம்சா வெளியில் 10 ரூபாய் என்றால் ஏர்போர்ட்களில் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஒரு டீ வெளியில் 12 ரூபாய் என்றால் ஏர்போர்ட்களில் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஒரு தோசை ரூ 300 க்கு விற்கப்படுகிறது.

ஒரு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இது சென்னை ஏர்போர்ட்டின் நிலை, ஆனால் கல்கத்தா ஏர்ப்போர்ட்டில் அமைச்சர் ஒருவருக்கே ஒரு டீ, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு இருக்கிறது, அமைச்சரும் ’ஏன் ஒரு டீ ஏர்போர்ட்டில் மட்டும் இவ்வளவு விலை, எல்லாமே ஒரே பால், ஒரே தேயிலை தானே’ என சமூக வலைதளங்களில் பதிவிடவே தற்போது அது பேசு பொருளாகி வருகிறது,

அமைச்சரே பதிவிட்டு இருப்பதால் இந்த விவகாரம் ஒன்றிய அரசுக்கு சென்று இருக்கிறது, பொதுவாக ஏர்போர்ட்டில் விலை இப்படி தான் இருக்கும் என அனைவரும் அறிந்ததே, பொதுமக்கள் இது குறித்து எத்துனையோ முறை இணையங்களிலும் பொதுவெளிகளிலும் கேள்வி கேட்டு இருந்தாலும் கூட, ஒரு அமைச்சர் கேட்டதற்கு தான் ஒன்றிய அரசு இசைவு கொடுத்து இருக்கிறது.

இந்த நிலையில் தான் ஒன்றிய அரசு, ஏர்போட்டிலும் மலிவு விலை உணவகங்கள் மற்றும் பெவரேஜ் ஷாப்களை திறக்க திட்டமிட்டு இருக்கிறது, இனி ஏர்போர்ட்டிலும் மலிவு விலையில் உணவு, டீ, குளிர்பானங்கள் உள்ளிட்டவைகள் மத்திய அரசு நிறுவப்பட்ட கடைகளில் கிடைக்குமாம், முதற்கட்டமாக டெல்லி மற்றும் மும்பை ஏர்போர்ட்களில் இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட இருக்கிறதாம்.