• India
```

வெறும் 30 ரூபாயில் தரமான அரிசி, கோதுமை..ஒன்றிய அரசின் பாரத் பிராண்ட் திட்டம்..!

Bharat Brand Rice And Wheat For Just 30 RS

By Ramesh

Published on:  2024-11-06 17:29:42  |    382

Bharat Brand Rice And Wheat For Just 30 RS - எளிய மக்களுக்கும் தரமான அரிசி கோதுமை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மலிவான விலையில் அரிசி, கோதுமையை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு.

Bharat Brand Rice And Wheat For Just 30 RS - இந்தியாவில் கிட்டதட்ட 230 மில்லியன் மக்களுக்கு தினசரி உணவு சரியாக கிடைப்பதில்லை, கிட்டதட்ட 6.3 மில்லியன் குழந்தைகளுக்கு தினசரி உணவே கிடைப்பதில்லை, இந்தியாவைப் பொறுத்தவரை வசதி படைத்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது, அந்த இடைவெளியே இத்தகைய ஏழ்மைக்கு காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒரு பொருள் விலையேற்றத்தை சந்திக்கும் போது பணம் படைத்தவர்களால் அந்த விலைவாசியை கடந்து போக முடிகிறது, ஆனால் ஒரு ஏழையால் அதை செய்ய முடியவில்லை, அவன் மூன்று வேளை உண்ணும் உணவை விலைவாசியல் ஒரு வேளையாக குறைக்கும் நிலை கூட ஏற்படுகிறது, சில குடும்பங்களில் மாத கடைசிகளில் எல்லாம் உணவு செய்ய எதுவுமே இருப்பதில்லை.



டிஜிட்டல் இந்தியாவில் இன்னமும் ஏழ்மை, பசி எல்லாம் இருக்கிறதா என்றால், ஆம் இருக்க தான் செய்கிறது எங்கும் இருக்க தான் செய்கிறது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்க தான் செய்கிறது, இதனை கருத்தில் கொண்டு தான், எளிய மக்கள் நாள் தோறும் அதிகரித்து வரும் விலைவாசியை எதிர்கொள்ளும் வகையில் மலிவு விலையில் அரிசி, மானிய விலையில் கோதுமைகளை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது, 

பாரத் பிராண்ட் என்ற பெயரில் 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் அரிசி (1கி/34ரூ) மற்றும் கோதுமை (1கி/30ரூ) இரண்டாம் கட்ட விற்பனைக்கு வந்து இருக்கிறது, மத்திய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்புகள், கேந்திரிய பந்தர், நபேட் உள்ளிட்ட மையங்களில் இந்த மலிவு விலை அரிசி, கோதுமை கிடைக்கிறது, பாரத் பிராண்ட் அரிசிகள் ஜியோ மார்ட், பிக் பாஸ்கட் உள்ளிட்ட ஈ காமெர்ஸ் தளங்களிலும் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.