Where To Buy Diwali Crackers - தீபாவளி என்றாலே பட்டாசு தான் அந்த வகையில் நல்ல தரமான பட்டாசுகள் எங்கு வாங்கலாம், என்ன பிராண்ட் வாங்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Where To Buy Diwali Crackers - அன்று முதல் இன்று வரை தீபாவளி என்றாலே இரண்டு முக்கியமான விஷயங்கள் தான் நியாபகத்தில் இருக்கும், ஒன்று ஆடை இன்னொன்று பட்டாசு, ஆடைகளை எப்படியும் எங்கேனும் வாங்கி இருப்பீர்கள், ஆனால் பட்டாசுகளை நன்கு தரமாக வெடிக்கும் பட்டாசுகளை எங்கு வாங்கலாம் என யோசிச்சிட்டே இருக்கீங்களா அப்ப உங்களுக்கு இந்த ஐடியா கரெக்டா இருக்கும்.
முதலில் பட்டாசு என்றாலே தனித்துவமாக தமிழகத்தில் தயாரிப்பது சிவகாசி தான், உங்களுக்கு லீவ் கிடைக்கும் பட்சத்தில் நேரடியாக சிவகாசிக்கு சென்று பட்டாசுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம், உங்கள் ஊரில் நீங்கள் ஒரு 5000 ரூபாய்க்கு வாங்கும் பட்டாசுகளை சிவகாசியில் 2000 ரூபாய்க்கே வாங்கி விட முடியும், அந்த அளவிற்கு சிவகாசியில் பட்டாசுகள் என்பது செம்ம சீப் ஆகவும் இருக்கும். குவாலிட்டியாகவும் இருக்கும்.
சரி என்ன பிராண்டுகள் வாங்கலாம்?
முதலில் அய்யன் பட்டாசுகள், சிவகாசியில் முதல் முதல் பட்டாசு மற்றும் தீப்பெட்டி கம்பெனியை ஆரம்பித்த நிறுவனம், அன்று முதல் இன்று வரை குவாலிட்டிக்கு பஞ்சம் இருக்காது, பசுமை பட்டாசுகளும் கிடைக்கும், இரண்டாவதாக அனில் பட்டாசுகள் இதுவும் அய்யன் பட்டாசுகளுடன் சேர்ந்த ஒரு நிறுவனம் தான், பட்டாசுகள் குவாலிட்டியாகவும் மலிவாகவும் கிடைக்கும், அடுத்ததாக ஸ்டாண்டர்டு, பட்டாசுகளில் கொஞ்சம் ஸ்டாண்டர்டு ஆன பட்டாசுகள் இந்த பிராண்டில் கிடைக்கும், ஆனால் கொஞ்சம் காஸ்ட்லி.
உங்களுக்கு இந்த 3 பிராண்டுகளில் எது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம், இவர்கள் மூவருமே ஆன்லைனிலும் பட்டாசுகள் விற்கிறார்கள், ஆனாலும் ஆப்லைனை விட ஒரு 20 முதல் 50 ரூபாய் வரை எக்ஸ்ட்ராவாக தான் இருக்கும், உங்களுக்கு அலைய முடியவில்லை என்றால் ஆன்லைனிலும் கூட வாங்கலாம், குவாலிட்டிக்கு பஞ்சம் இருக்காது, பக்காவாக பேக்கிங் செய்து பாதுகாப்பான முறையில் டெலிவரி செய்கிறார்கள்.
Ayyan Online: https://ayyanonline.in - Anil Online: https://www.anilcelebrations.co.in - Standard Online: https://standardcrackers.com