• India
  • May 29, 2025 at 02:43:44 PM
```

Deepseek AI...தொடர்ந்து தடை கோரும் நாடுகள்...என்ன காரணத்திற்காக தெரியுமா...?

Deepseek Banned

By Ramesh

Published on:  2025-02-07 13:49:03  |    135

Deepseek Banned Countries - பிரபல சீன நிறுவனத்தின் Deepseek AI யிற்கு பல நாடுகள் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Deepseek என்பது ஒரு சீன செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனம், கடந்த 2023 ஆம் ஆண்டு லியாங் ஃபெங் என்பவரால் ஹாங்சு நகரை மையமாக கொண்டு துவங்கப்பட்டது, இந்த நிறுவனம் கடந்த ஜனவரி 2025 யில் Deepseek R1 என்ற செயற்கை நுண்ணறிவால் செயல்படும் ஒரு Chatbot யை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தி இருந்தது, 

இந்த Deepseek கிட்டத்தட்ட ChatGPT, Gemini போல அதனுடைய திறனிலேயே சிறப்பாக தான் செயல்பட்டது, சரி அப்படி என்றால் Deepseek க்கிற்கும், மற்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கும் என்ன தான் வித்தியாசம் என்றால், Open AI தனது GPT 4 யை பயிற்சி செய்ய மட்டும் 100 மில்லியன் டாலர்களை செலவு செய்த நிலையில், இந்த Deepseek வெறும் 6 மில்லியன் டாலர்களை தான் செலவு செய்து இருக்கிறதாம்.



சரி, அப்படின்னா நல்லது தானே, எதற்காக தடை எல்லாம் என்றால், பயனர்களின் தகவல்களை நீங்கள் எந்த விதத்தில் கையாளுகிறாகிறீர்கள் என Deepseek நிறுவனத்திடம் கேட்ட போது அதற்கு சரியான பதில் ஏதும் கொடுக்கவில்லையாம், இதனால் பல நாடுகளின் அரசு நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு Deepseek யை பயன்படுத்த தடை விதித்து இருக்கிறார்களாம்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென்கொரியா, இத்தாலி, தைவான் உள்ளிட்ட நாடுகள் Deepseek செயலி ஆனது பயனர்களின் தகவல்களுக்கும், நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கும் இடையூறாக கருதி தடை செய்து இருக்கின்றன, அப்படி என்றால் மற்ற நிறுவனங்களின் AI பயனர்களின் தகவல்களை கேட்பதில்லையா என்றால் எல்லா நிறுவனங்களும் பயனர்களின் தகவல்களை கோர தான் செய்கிறது.

" ஆனால் சீனாவின் பல செயலிகள் உளவு பார்க்கும் செயலிகளாக இருப்பதனால், அதே சந்தேகம் இந்த Deepseek யின் மீதும் எழுவதாக நாடுகளின் அரசு ஏஜென்சிகள் கூறுகின்றன "