• India
  • June 23, 2025 at 11:50:29 PM
```

உலகின் முதல் CNG ஸ்கூட்டர்...அறிமுகப்படுத்துகிறது TVS...80 கி.மீ மேல மைலேஜாம்...!

TVS Jupiter CNG Bike

By Ramesh

Published on:  2025-01-20 08:39:57  |    458

TVS Jupiter CNG - பிரபல TVS நிறுவனம் ஆனது உலகின் முதல் CNG ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

TVS Jupiter CNG - உலகம் முழுக்க எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் கார்களை நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது TVS நிறுவனம் பிரபல Expo ஒன்றில் தங்களது, CNG பைக் ஒன்றை அறிமுகப்படுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது, TVS இந்த பைக்கை வெளியிடும் பட்சத்தில் உலகின் முதல் CNG பைக் ஆக TVS CNG இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி, CNG பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றாதா என கேட்டால் வெளியேற்றும் தான், ஆனால் பெட்ரோல், டீசலை விட கம்மியாக தான் வெளியேற்றும், பெட்ரோலை விட CNG யின் சந்தை மதிப்பும் கம்மி என்பதால் வாடிக்கையாளர்களை நிச்சயம் CNG வாகனங்கள் ஈர்க்க வாய்ப்பு இருக்கிறது, பெட்ரோலின் சந்தை மதிப்பு தற்போது சராசரியாக 103/லிட்டர் என இருக்கிறது.



அதே சமயத்தில் CNG யின் சந்தை மதிப்பு 82.5/ கிலோ ஆக இருக்கிறது, இந்த புதிய TVS Jupiter CNG ஒரு ஸ்கூட்டி போன்ற வடிவமைப்பையே கொண்டு இருக்கிறது, 1 கிலோ CNG க்கு 84 கி.மீ மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது, ஏற்கனவே செயலில் இருக்கும் Jupiter 125 ஆனது ஒரு கி.மீக்கு செயல் செலவு என்பது 1.87 ரூபாயாக இருக்கிறது, ஆனால் இந்த புதிய CNG பைக்கின் செயல் செலவு 1.42 Per கி.மீ தானாம்.

வருடத்திற்கு ஒருவர் பெட்ரோல் ஜூப்பிடர் மூலமும், CNG ஜூப்பிடர் பைக் மூலமும் 12,000 கி.மீ பயணம் செய்கிறார் என வைத்துக் கொள்வோம், இங்கு பெட்ரோல் ஜூப்பிடர் மூலம் பயணம் செய்தவருக்கு ஆகும் செலவு 22,440 ரூபாய், CNG ஜூப்பிடர் மூலம் பயணம் செய்தவருக்கு ஆகும் செலவு 17,040 ரூபாய், இதன் மூலம் ஒருவர் வருடத்திற்கு அவர் ஓட்டும் கி.மீ அளவை பொறுத்து ரூ 5000 வரை சம்பாதிக்க முடியும்.

" சரி இந்த பைக் எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என கேட்டால், அக்டோபர் 2025 யில் வெளியாகும் என கூறப்படுகிறது, பைக் உலகில் இது புதியதொரு இன்னோவேசனை கொண்டு வரும் என கூறப்படுகிறது "