Agiukul Cosmos Startup Story - பொதுவாக இந்தியாவில் ராக்கெட் என்றால் அது இஸ்ரோ மட்டும் தான், வேறு இந்தியாவில் பெரிதாக ராக்கெட் தயாரிப்பிற்கு என்று தனியார் நிறுவனங்கள் ஏதும் இல்லை, உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மிகப்பெரிய விண்வெளித்துறை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் ஆக பார்க்கப்படுகிறது,
ஆனால் தற்போது இந்தியாவில், அதும் தமிழகத்தில் மொயின் மற்றும் ஸ்ரீ நாத் ரவிச்சந்திரன் என இருவரும் இணைந்து அக்னிகுல் காஸ்மோஸ் என்ற பெயரில் ஒரு தனியார் ராக்கெட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கி இருக்கின்றனர், அதுபோக அந்த நிறுவனத்தில் இவர்களே முழுக்க முழுக்க தயாரித்த அக்னிபான் ராக்கெட்டையும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் வெற்றிகரமாக பரிசோதித்தும் இருக்கின்றனர்.
பொதுவாக ஒரு ராக்கெட் தயாரித்து, பல செயற்கைகோள்களை அனுப்புவதற்கு பல்லாயிரம் கோடிகள் செலவு ஆகின்றன, ஒரு அவசரத்திற்கு ஏதாவது ஒரு குட்டி செயற்கை கோளை அனுப்புவதற்கு பல்லாயிரம் கோடி ராக்கெட்டை விண்ணில் அனுப்பி வைக்க முடியாது, பல செயற்கைகொள்கள் உருவாகும் வரையிலும் அந்த ராக்கெட் காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
ஆனால் இவர்கள் தயாரித்து இருக்கும் மைக்ரோ ராக்கெட்டுகள் மூலம், ஒரு அவசரத்திற்கு சிறிய ரக செயற்கை கோள்களை உடனடியாக விண்ணில் ஏவ முடியும், செலவுகளும் பன்மடங்கு கம்மி, ராக்கெட்டுகள் செயற்கை கோள்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை, அவ்வப்போது தயாரிக்கும் செயற்கை கொள்களை உடனடியாக விண்ணில் ஏவ முடியும்.
இந்த ஐடியாவை முதலில் கூறிய ஸ்ரீநாத் விண்வெளி துறையில் பிரசித்தி பெற்றவர் அல்ல, அவர் படித்த துறையும் வணிக துறை, மொயின் மட்டுமே ஏரோநாட்டிகல் படித்தவர், ஒருவர் ஐடியா கொடுக்க, இன்னொருவர் உள் வாங்கி கொள்ள என இந்த இருவரின் இணைவில் இந்த அக்னிகுல் காஸ்மோஸ் என்ற நிறுவனம் சாத்தியம் ஆகி இருக்கிறது.
" வருகின்ற 2025 முதல் தங்களது அக்னிபான் ராக்கெட் மூலம் பல செயற்கை கோள்களை அடுத்து அடுத்து ஏவ இவர்கள் முடிவெடுத்து இருக்கின்றனர், அது சாத்தியப்படும் பட்சத்தில் இந்தியா தனியார் விண்வெளி துறையில் சாதிக்க அது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமைய வாய்ப்புகள் இருக்கிறது "