• India
```

ஒரு கிலோ உப்பு ரூ 30,000 !! எந்த நாட்டில் தெரியுமா?

World’s most expensive salt

By Dhiviyaraj

Published on:  2025-01-28 16:19:08  |    379

உணவின் சுவையை அதிகரிக்க உப்பு முக்கியமானதே. வெள்ளை உப்பு, அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு, கல் உப்பு மற்றும் இந்துப்பு போன்ற பல வகையான உப்புகள் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம்.

உணவின் சுவையை அதிகரிக்க உப்பு முக்கியமானதே. வெள்ளை உப்பு, அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு, கல் உப்பு மற்றும் இந்துப்பு போன்ற பல வகையான உப்புகள் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம். 

பொதுவாக, உலகின் பெரும்பாலான நாடுகளில் உப்பின் விலை குறைவாகவே இருக்கும். ஆனால், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த உப்பு ஒன்று உள்ளது, அதாவது கொரியாவின் மூங்கில் உப்பு (Korean Bamboo Salt). இது ஒரு கிலோ 30,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மூங்கில் உப்பு சாதாரண உப்பைப் போல எளிதில் தயாரிக்க முடியாது. இதற்கான தயாரிப்பு முறையானது மிகவும் நேரமும் முயற்சியும் தேவைப்படும் ஒன்றாகும்.


தயாரிப்பு முறை

*முதலில், சாதாரண உப்பு எடுத்து மூங்கில் குச்சிகளுக்குள் அடைக்கப்படுகிறது.

*பின்னர், மஞ்சள் நிற களிமண் கொண்டு மூடப்படுகிறது.

*இதை அதிக வெப்பத்தில் சூடாக்கப்பட செய்கிறார்கள்.

*இந்த செயல்முறை 9 முறை தொடர்ச்சியாக செய்யப்படுகிறது.

*இறுதியாக, உப்பின் நிறம் மாற்றப்பட்டு மூங்கில் உப்பாக மாறுகிறது.

*இந்த செயல்பாடு முழுமையாக முடிவடைவதற்கு குறைந்தது 50 நாட்கள் ஆகும்.


Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola