• India
  • May 25, 2025 at 01:58:01 PM
```

பான் கார்டு மூலம் நடைபெறும் மோசடி!! இதை தயவு செய்து பண்ணாதீங்க..

pan card scam in india

By Dhiviyaraj

Published on:  2025-01-13 15:52:06  |    636

இந்தியாவில் தொடர்ந்து பான் கார்டு தொடர்பான மோசடிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியர்கள் அனைவருக்குமே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. அந்த பான் கார்டு நம்முடைய வங்கிக் கணக்கு, ஆதார் கார்டு போன்ற விஷயங்களுடன் லிங்க் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் வங்கி அலுவலகம் மற்றும் பல முக்கிய அரசுப் பணிகளில் பான் கார்டு முக்கியமான ஆவணமாக மாறி இருக்கிறது. 

இப்படி இருக்கும் சூழலில்  இந்தியாவில் தொடர்ந்து பான் கார்டு தொடர்பான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த மோசடிகளை பொது மக்களை சிக்க வைக்க அவர்களின் பான் கார்டு தகவலை அறிந்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர். பான் கார்டு தகவலை புதுப்பிக்கவில்லை என்றால்  சில மணி நேரங்களில் உங்களுடைய வாங்கி கணக்கு முடக்கப்படும் என்று சொல்லி  மோசடி செய்கிறார்கள்.

மேலும் தெரியாத இடத்தில் இருந்து வரும் மின்னஞ்சல் அல்லது இணைப்பைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த அவசர செய்தி அல்லது மின்னஞ்சலுக்கும் உடனடியாக பதிலளிக்க வேண்டாம். அப்படி தகவல் பொய்யானதாக கூட இருக்கலாம். இதனால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அது ஒரு மோசடியாகவும் இருக்கலாம். இது தவிர, நீங்கள் 2 படி சரிபார்ப்பையும் பயன்படுத்த வேண்டும். இது ஸ்கேமர்கள் உங்கள் சாதனத்தை எளிதாக அணுகுவதைத் தடுக்கும். ஸ்கேமர்கள் கடவுச்சொல், வங்கி விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடி உங்களை ஏமாற்றுகிறார்கள்.இதுபோன்ற விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்

Harmful Effects of Drinking Coca Cola
Information

Harmful Effects of Drinking Coca Cola