• India
```

எதில் முதலீடு செய்வது சிறந்தது...நிலமா அல்லது தங்கமா...?

Which Is Best Investment Gold Or Property

By Ramesh

Published on:  2024-12-10 13:34:32  |    113

Which Is Best Investment Gold Or Property - எல்லோருக்குமே ஒரு குழப்பம் இருக்கும், திடீர் என்று கையில் பணம் வரும், அது சீட் பணமோ அல்லது PF மாதிரியான ஏதாவது ஒரு வகையில் வந்த பணமாகவோ இருக்கும், அந்த சமயத்தில் எதில் அந்த பணத்தை முதலீடு செய்வது என தெரியாமல், ஒரு கட்டத்தில் வங்கியிலேயே போட்டு விட்டு, கடைசியில் கொஞ்சம் கொஞ்சமாக செலவழித்து மொத்தமாக அந்த பணத்தை செலவழித்து விடுவோம்.

இன்னும் சிலர் கையில் பணம் இருக்கும் போது நிலத்தில் முதலீடு செய்வதா இல்லை தங்கத்தில் முதலீடு செய்வதா என குழம்பி நின்று கொண்டு இருப்பர், கையில் ஒரு 10 இலட்சம் வைத்து இருக்கிறீர்கள் என்றால் அதில் ஒரு 5 இலட்சத்திற்கு ஏதாவது ஒரு சிட்டியின் அவுட்டரில் நிலத்தை வாங்கி போடுங்கள், இன்னொரு 5 இலட்சத்தை தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.



எப்போதுமே கையில் பணம் வந்தால் இரண்டிலும் சரி பாதியாக முதலீடு செய்வது நல்லது, திடீரென்று ஏதாவது ஒரு அவசர தேவை வந்தால், கடன் பெறுவதற்கு தங்கம் வசதியாக இருக்கும், நிலத்தை அடகு வைத்து கடன் பெறுவது என்பது கொஞ்சம் கடினமான காரியம், அவசர காரியத்திற்கு வாங்கிய நிலத்தை விற்கலாம் என்றால் உடனடியாக நிலத்தை விற்பனை செய்வது என்பது எந்த பலனும் தராது.

அந்த வகையில் யோசித்துப் பார்த்தால் உங்களிடம் பணம் வரும் பட்சத்தில் தங்கத்தில் பாதி, நிலத்தில் பாதி என முதலீடு செய்வதே சரியாக இருக்கும், தங்கம் உங்களை ஏதாவது எமர்ஜென்சியில் பாதுகாக்கும், நிலம் ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே உங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும், அவசர தேவைக்கு தங்கம், எதிர்கால தேவைக்கு நிலம் என இரண்டிலும் முதலீடு செய்வது உங்கள் பொருளாதாரத்தை எப்போதும் சமநிலையில் வைக்க உதவிடும்.