If It Is Not Ok Then Go And Find Another Company Says Amazon - ஐந்து நாள் அலுவலக வேலை கடினமாக இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தில் இருந்து விலகி வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என அமேசான் நிறுவனம் கறாராக கூறி இருப்பது ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
If It Is Not Ok Then Go And Find Another Company Says Amazon - பொதுவாக அமேசான் ஊழியர்களை கொரோனோவுக்கு முன்னர், கொரோனோவிற்கு பின்னர் என இரு வகை ஆக பிரித்துக் கொள்ளலாம், அதாவது கொரோனோவிற்கு முன்னர் வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு சராசரியாக வாரத்திற்கு 4 நாட்கள் வந்து பணி புரிந்தனர், ஆனால் கொரோனோவிற்கு பின்னர் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரியும் நாட்கள், வாரத்திற்கு 1.5 நாட்களாக குறைந்து இருக்கிறது.
அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிவது என்பது நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு தன்மையை வெகுவாக பாதிப்பதாக அமேசான் தரப்பு கூறுகிறது, அது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் ஆப்லைன் செயல்பாடுகள் முற்றிலுமாக தடைபடுவதாகவும் அமேசான் கூறுகிறது, இது அமேசான் நிறுவனத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளை பாதிப்பதால் தான் அமேசான் 5 நாள் அலுவலக வேலையை உறுதி செய்தது.
கலந்துரையாடல் இல்லாத ஒரு வேலை சரியாக நிகழாது, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரியும் போது அருகில் இருப்பவருடன் கலந்துரையாடி பணி புரிய முடியும், அனுபவசாலிகளுடனான உரையாடல் அனுபவத்திற்கு வழி வகுக்கும், புதியதாக கற்றுக்கொள்ள முடியும் என அமேசான் கூறுகிறது, ஆனாலும் கூட இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், சிலர் பதவியும் விலகி வருகின்றனர்.
இது குறித்து அமேசான் வெப் சர்வீஸ் தலைமை நிர்வாக அதிகாரி, மாட் கார்மன் கூறுகையில், " விருப்பம் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரியட்டும், விருப்பம் இல்லாதவர்கள் விலகி வேறு வேலை தேடிக் கொள்ளட்டும், ஆனால் ஜனவரி 2 க்கு பின்னர் அனைவரும் 5 நாள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் ஆக வேண்டும், விதிகளில் மாற்றம் இல்லை " என கறாராக அறிவித்து இருக்கிறார்.