அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம். இந்நிறுவனம் இதுவரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, மாடல் 3 வாகனங்களை தயாரித்துள்ளது. இப்போது இந்தியாவிற்கு வருவது பற்றி பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேசமயத்தில் இங்குள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சில பிரச்சினைகளை சந்திக்கின்றன.டெஸ்லா நிறுவனம் கேட்டுக்கொண்டபடி அந்நிறுவனம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் மீது வரி சலுகை கொடுப்பதில் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தற்போது அழைத்துள்ளது. காரணம் டெஸ்லா சில உதிரிபாகங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை அழைப்புக்கு டாடா மோட்டார்ஸ்-ன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஏற்கனவே பல்வேறு போட்டிகளுக்கு நடுவில் இருக்கும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனமான டெஸ்லா வருகையால் தொழில்முனை போட்டிகளை அதிகம் சந்திக்கும் சூழல் உருவாகும்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனத்திற்காக மத்திய அரசு தனது கொள்கை மற்றும் இலக்கில் மாற்றம் செய்வது சரியல்ல என்றும் டாடா நிறுவனம் கூறுகிறது.எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்களின் தயாரிப்பில் உலகளாவிய சந்தை வர்த்தகத்திற்கு ஹப்பாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டதே FAME (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicle) என்ற கொள்கையை.ஒரு வேலை டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் வாகன இறக்குமதி வரி விலக்கு சலுகையை பெற்றால் இங்கிருக்கும் பிற நிறுவனங்களுக்கும் அச் சலுகையை அளித்தல் அவசியம்.

எனில் எவ்வாறு இந்தியாவை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஹப்பாக மாற்றுவது என்று டாடா நிறுவனம் கேள்வி எழுப்புகிறது.இறக்குமதியில் சலுகையை அளிப்பதை தவிர்த்து இந்தியாவிலேயே எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களைத் தயாரிப்பை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மக்கள் பயன்பாட்டிற்கு மலிவு விலையில் வாகனங்களை விற்பனை செய்ய முடியும்.

மத்திய அரசின் FAME கொள்கைக்கும் எதிராக இருக்காது என்று டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன வர்த்தகப் பிரிவின் தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மத்திய அரசு இது தொடர்பாக ஆலோசிக்குமா என்று பார்க்கலாம்