ஆப்கனின் போர் மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்டு வரும் ஆட்சி மாற்றங்களை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான குஐநுழு தலிபான்கள் இந்தாயவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இக்கூட்டமைப்பின் பொது இயக்குநர் அஜய்சாய் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் வழியாக ஆப்கனுக்கு வணிக வர்த்தகம் மேற்கொள்வதையும் நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.


இந்தியா ஆப்கனுடன் நீண்ட காலமாக வர்த்தகத் தொடர்பை கொண்டுள்ளது. மேலும் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளிகளிலும் ஒருவராக நல்லுறவைப் பேணி வருகிறது. 2021-ம் ஆண்டில் நமது நாடு ஆப்கானிஸ்தானுடன் கொண்டிருந்த ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 835 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதுமட்டுமல்லாமல் 400 திட்டங்களில் அந்நாட்டுடன் முதலீடும் செய்யப்பட்டுள்ளது.


இப்போது பாகிஸ்தான் வழித்தடத்தில் வணிகம் தடைபட்டுள்ளதால் வடக்கு மற்றும் தெற்கு சர்வதேச போக்குவரத்து பாதையிலும் துபாய் வழியாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து ஆப்கனிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் சர்க்கரை மருந்துகள் ஆடைகள் தேயிலை மற்றும் காப்பிக்கொட்டைகள். அதே போல் வெங்காயம் போன்றவை ஆப்கனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதுவரை இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.