Star Health and Allied Insurance நிறுவனம் இம்மாதம் புதிய பங்கை வெளியிட உள்ளது. அது நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரையிலும் விற்பனையில் இருக்கும். ஒரு புதிய பங்கின் விலை ரூ.870-900 ஆக இருக்கும் என்று தெரிகிறது. புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக $7 பில்லியன் தொகையை நிதியாக திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு, பிரமோட்டர்ஸ் மற்றும் பங்குதாரர்களிடம் உள்ள பங்குகளை ரூபாய் 5 கோடியே 83 லட்சத்துக்கும் அதிக மதிப்புக்கு விற்பனை செய்யவும் திட்டம் உள்ளது. மேலும் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள பங்குகளை இருப்பில் வைக்கவும் உள்ளனர். இதன் மூலம் ஆரம்ப கட்ட பங்கு விற்பனை மதிப்பு 7249 கோடி ரூபாய் அளவு இருக்கும் எனவும் எதிர்பார்கின்றனர்.

சந்தை நிலவரத்தை காணும்போது இந்நிறுவனத்தின் GMP மதிப்பு நேற்று 130ஆகவும் அது குறைந்து இன்று 50க்கும் வந்துள்ளது. பங்கு சந்தையில் முன்னணியிலுள்ள BSE மற்றும் NSE ஆகிய இரண்டிலும் டிசம்பர் 10ம் தேதியன்று பட்டியலிட திட்டம் உள்ளது.

ஸ்டார் ஹெல்த் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் மற்றும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா போன்ற மிகப்பெரிய முதலீட்டாளர்களின் கூட்டமைப்பை கொண்டுள்ளது. இப்போது புதிய பங்கு வெளியிடுவதன் மூலம் இந்நிறுவனத்தின் முதலீட்டு தளத்தை மேலும் திடமாக்க முடியும் என்று தெரிகிறது.

BOFA செக்கியுரிட்டீஸ், CITI, கோடக் மஹிந்திரா கேபிடல் மற்றும் ஆக்ஸிஸ் கேபிடல் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ள முன்னணி மேலாளர்களாக உள்ளனர்.