விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு.  வேளாண்மை சார்ந்த விஷயங்களில் ஒரு விவசாயி சந்திக்கும் பிரச்சனைகள் அதிகம். வேளாண் உற்பத்தியை பொறுத்தவரையில் பல்வேறு உபகரணங்களும் வேளாண் கருவிகளும் விவசாயிகளுக்குத்  தேவைப்படுகிறது.

130-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தடம் பதித்த டிராக்டர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சோனாலிகா நிறுவனம் உலக அளவில் வேளாண் இயந்திரமயமாக்குவதில் இருந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக World  No.1 ஒருங்கிணைந்த டிராக்டர் உற்பத்தி தளத்தை ஹோஷியார்பூர், பஞ்சாப் ஆகிய இடங்களில் நிறுவியுள்ளது.

இந்நிறுவனம் இப்போது விவசாயப் பணிகளுக்குத் தேவைப்படும் கருவிகள் வாடகைக்கு கிடைக்க ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. விவசாயப் பணிகளுக்கு தேவைப்படும் பல்வேறு கருவிகளை வைத்துள்ள உரிமையாளர்கள் அதை இந்த செயலியில் இணைவதன் மூலம் வாடகைக்கு விடலாம். இதன் மூலம் ஒரு தொடர் வருமானம் அவர்களுக்கு கிடைக்கும். மேலும் பிற விவசாயிகளும் இதன் மூலம் பயனடையலாம். மொபைல் மூலம் இயக்கும் வசதி கொண்ட இந்த செயலி “சோனாலிகா வேளாண் தீர்வுகள்” என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யார் யார் இந்த செயலியில் இணையலாம் :  டிராக்டர், அறுவடை இயந்திரம், நடவு இயந்திரம், உயர்வகை வேளாண் இயந்திர தளவாடங்களை வைத்திருக்கும் நபர்கள் எல்லோரும் இந்த செயலியில் இணைந்து பயனடையலாம். மேலும் நவீன வேளாண் கருவிகளை இயக்கத் தெரிந்தவர்களும் இதில் தமது விவரங்களை பதிவிடலாம். இந்த விவசாயிகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலை இந்நிறுவனம் சேகரித்து ஒரு தகவல் தளம் ஒன்றை உருவாக்கி வருகிறது.

இந்த மொபைல் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதில் தன்னை பற்றிய விவரங்களை பதிவு செய்வது மிக எளிது. இதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்ய வாடிக்கையாளர் சேவைப் பிரிவும் உள்ளது. சிக்கன செலவில் தொழில் நுட்ப புதுமைகளுடன் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த செயலி இந்திய விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் டிஜிட்டல் முறையில் வழங்குகிறது.

இந்நிறுவனம் பல ஆண்டுகளாக விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு செயல்படுவதால் இந்திய அரசு அதன் திட்டமிடல் பிரிவான “நிதி ஆயோக்” அமைப்புக்கு ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவித்துள்ளது.