புது டில்லியை தலைமையிடமாக கொண்ட Snapdeal Ltd., புதிய பங்குகள் விற்பனை செய்ய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. சாப்ட்பேங்க் குரூப் கார்ப்பரேஷனால் ஆதரிக்கப்படும் இந்திய இ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Snapdeal, இந்த IPO-க்கு தேவையான பூர்வாங்க ஆவணங்களைத் தாக்கல் செய்தது.

புதிய பங்குகள் விற்பனை செய்வதன் மூலம் ரூ.1250 கோடி நிதி திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது மட்டுமல்லாது, சாப்ட்பேங்க் உட்பட தற்போது இதன் பங்குதாரர்களாக இருந்து வரும் அனைவரும் சேர்ந்து 30.77 மில்லியன் இரண்டாம் நிலை பங்குகளை விற்பனை செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.

புதிய பங்குகள் விற்பனையில் திரட்டப்படும் நிதியை நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், சரக்கு வினியோக மேம்பாட்டுக்காகவும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்காகவும் செலவு செய்ய ஸ்னாப்டீல் திட்டமிட்டுள்ளது.

சந்தையில் அதன் பெரிய போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்கவும், மதிப்பு-உந்துதல் ஈ-காமர்ஸில் கவனம் செலுத்தவும் ஸ்னாப்டீல் தன்னைத்தானே சற்று மாற்றிக்கொண்டது. eBay Inc. மற்றும் Sequoia உள்ளிட்ட பிற ஆதரவாளர்களைக் கொண்ட நிறுவனம், செப்டம்பர் 30 வரையிலான ஆறு மாதங்களில் சுமார் 2.4 பில்லியன் ரூபாய் செயல்பாட்டு வருவாயாகப் பதிவு செய்தது.

ஸ்னாப்டீல் டேபிள் மேட்ஸ், டம்மி டிரிம்மர்கள், தாடியை சீர்செய்யும் எண்ணெய்கள் மற்றும் கம்பளி போர்வைகள் அனைத்தையும் $5க்கு கீழ் விற்பனை செய்கிறது. இது ரூ.1000-க்கும் கீழ் மதிப்புள்ள பொருட்கள் என பட்டியலிடப்பட்ட 60 மில்லியன் பொருட்களில் பத்தில் ஒன்பது பங்குக்கும் அதிகமானவை. கடந்த சில மாதங்கள் பண்டிகை காலமாதலால் ஃபேஷன் பிரிவில் 254%, சமையலறை பிரிவில் 101% மற்றும் அழகு பிரிவில் 93% என ஸ்னாப்டீலின் விற்பனை இருந்ததாக ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் பல நிறுவனங்கள் zomato, nyka, paytm, policybazaar போன்றவை புதிய பங்குகள் வெளியீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது, அதன் வரிசையில் இப்போது ஸ்னாப்டீலும் சேர்ந்துள்ளது.