நாட்டின் மிகப்பெரிய மருந்து குப்பிகள் தயாரிப்பாளரான ஸ்காட் கைஷா நிறுவனத்துடன் அதன் 50% பங்குகளை வாங்கி சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கை கோர்க்கிறது. 

“கொரோனா மற்றும் பிற தொற்றுநோய் காலங்களில் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் தமது தயாரிப்புகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பாக்கிங்  &  ஸ்டோரேஜ் செய்வது விற்பனை சங்கிலியின் இன்றியமையாத அம்சம்” என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் CEO அடார் பூநவாலா குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் “எங்கள் நிறுவனம் ஸ்காட் கைஷாவின் நீண்ட கால வாடிக்கையாளர்கள். கோவிஷீல்டு உள்பட்ட பல தடுப்பூசிகளுக்கும் இந்நிறுவனத்தின் ஊசிகள் மற்றும் குப்பிகளையே நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.” என்று கூறினார்.

இந்த நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் நிதிநிலை குறித்த விவரங்களை இரு நிறுவனங்களுமே வெளியிடவில்லை.

ஜெர்மனியின் ஸ்காட் AG 130 ஆண்டுகளுக்கு மேல் பிரபலமான  கண்ணாடி தயாரிப்பு நிறுவனம். இந்தியாவின் கைஷா நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான மருந்து குப்பிகள் தயாரிக்கும் நிறுவனம். இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியே  ஸ்காட் கைஷா.