வங்கிகளில் பெறப்படும் வீட்டுக்கடன்கள் மூலம் நாம் நினைக்கின்ற வீட்டை வாங்கிகொண்டு மாதம் தோறும் தவணை முறையில் குறிப்பிட்ட சில தொகையை EMI ஆக செலுத்துகிறோம். இது போல செலுத்தும் மாத தவணை ஆனது குறைந்தபட்சம் பத்து ஆண்டு முதல் அதிகபட்சம் முப்பது ஆண்டு வரை நீட்டித்து, தங்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல மாத தவணை தொகையானது செலுத்தப்பட்டு வருகின்றது.

வங்கியினால் கொடுக்கப்படும் காலத்தில், கடன் பெற்றவருக்கு ஏதாவது நிகழ்ந்தாலோ அல்லது மாத தவணையை கட்ட முடியாமல் போனாலோ கடன் மறு சீரமைப்பின் மூலமாக, கடனை திருப்பி கட்ட கால அவகாசம் ஆனது வழங்கப்படும்.

SBI வங்கி:

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட இந்நிலையில் SBI உள்ளிட்ட சில வங்கிகளில் EMI தளர்வுகள் ஆனது 3 மாதத்திற்கு கடைப்பிடிக்கப்பட்டது. இப்போது அந்த தளர்வுகள் முடிவடைந்துள்ள சூழ்நிலையில், மீண்டும் தன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது SBI வங்கி.

வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட சில்லறை கடன்களைச் செலுத்த 2 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை நீட்டத்துக்கொள்ளலாம் என் எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த கடன் மறு சீரமைப்பை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் முதலாவதாக எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளையை அணுகியும் தவணை கால அவகாசத்தினை நீட்டித்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 ஆண்டுகள் கடன் மறு சீரமைப்பு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் திட்டத்தின் மீது 0.35% கூடுதலாக வட்டி விகிதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கியினை தொடர்ந்து, ICICI வங்கி, HDFC வங்கியும் கடன் மறு சீரமைப்பு அறிவிப்பினை வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI-யின் வீட்டுக் கடன்களுக்கு 7% முதல் 7.35% வட்டி விதிக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், SBI-யின் யோனோ செயலியின் (YONO) மூலம் இந்த கடனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி திட்டத்துக்கு மாற ஒரு முறை மாற்றுக் கட்டணத்துடன் ஜிஎஸ்டி கட்டணமும் செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar