அதிகமான வாடிக்கையாளர்களைத் தன் வசம் கொண்டிருக்கும் BPL மற்றும் Kelvinator ஆகிய இரண்டு பிராண்ட்டின் மின்சாரப் பொருட்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்வதற்கான உரிமத்தை இப்போது ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் பெற்றுள்ளது.

மளிகை, மின்னணு, தொலைதொடர்பு, பெட்ரோலியம் என்று பல பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இயங்கி வருகிற ரிலையன்ஸ் ரீடெயில் இப்போது மின்சார பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் கால் பாதித்துள்ளது. இதில் kelvinator நிறுவனத்துடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துமுடித்துவிட்டதாகவும் விரைவில் BPL நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று செய்தி வந்துள்ளது.

இந்த ஒப்பந்தப்படி BPL மின்பொருட்களான AC, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டெலிவிஷன், பல்புகள், ஃபேன் என்று அனைத்து பொருட்களையும் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும். இந்த பொருட்கள் எல்லாம் ரிலையன்ஸ் ஷோரூமில் மட்டுமல்லாது ஆன்லைன்னிலும் பிற கடைகளிலும் கிடைக்கும்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமும் இருக்காது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தீவிரமான வியாபார செயல்பாடும் விநியோகத் திட்டங்களும் பழமையான இந்த பிராண்ட் பொருட்களுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாய் அமையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. புதிய பொருட்களை அறிமுகம் செய்யவும் பண்டிகை காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர்களும் கொரோனா கால கட்டத்தின் பாதிப்பை சந்தித்திருந்தாலும் இந்நிறுவனத்தின் லாபம் முதல் காலாண்டில் 123 சதவீதம் உயர்ந்து 962 கோடியாக இருந்துள்ளது. செயல்பாட்டு வருவாய் 22 சதவீதம் அதிகரித்தது ரூ.38,547 கோடியாக உள்ளது. இந்நிறுவனம் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் வியாபார கூட்டில் தீவிர கவனம் செலுத்தியதால் ஸ்டோர்ஸ் மூடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய பெரும் உதவியாய் இருந்தது.