ஆன்லைன் பரிவர்த்தனைகளில் NPCI-ன் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க டிஜிட்டல் கட்டண தளத்தில் புதிய நிறுவனங்களின் நுழைவிற்கு ரிசர்வ் வங்கி முன்னம் அனுமதி கொடுத்திருந்தது.

புதிய கட்டண நெட்வொர்க்கைத் தயாரிக்கும் முயற்சியில் சென்ற ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆர்வமுள்ள நிறுவனங்கள் EOI களை (Expressions of Interest) சமர்ப்பிக்கலாம் என்று அறிக்கை விட்டிருந்தது. அதன்படி அமேசான், கூகுள் (Google), பேஸ்புக் மற்றும் டாடா குழுமத்தின் தலைமையில் குறைந்தது ஆறு குழுக்கள் New Umbrella Entities (NUEs) என்று ஒரு புதிய உரிமத்திற்காக விண்ணப்பம் செய்திருந்தன.

இதற்காக இவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளன. ஆனாலும்  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் யூனியன் பாங்க்  ஆஃப் இந்தியா ஆகியவை NPCI இல் பங்குதாரர்களாக இருந்த காரணத்தால் அவற்றுடன் கூட்டு சேர மத்திய நிதி அமைச்சகம் தடை விதித்தது.

இந்நிலையில் தற்போது ஊடக அறிக்கையின்படி அயல்நாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தரவு பாதுகாப்பு பிரச்சனை மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதால்  புதிய உரிமம் அளிப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி .