விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல நல்ல திட்டங்களில் PM Kisan திட்டமும் ஒன்று. அதன் மூலம் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இது 3 சம தவணைகளாக கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் 2019-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. சுமார் 1 கோடிக்கும் மேல் விவசாயிகள் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த நிதியுதவியை பெறுகின்றனர்.

இந்த நிதி உதவி மட்டுமல்லாது இன்னும் பல சலுகைகளும் இந்த திட்டத்தில் அடங்கும். அவை PM கிசான் மந்தன் யோஜனா ஓய்வூதியம், PM கிசான் கிரெடிட் கார்டு மற்றும் PM கிசான் ID கார்டுகள் ஆகியவை.

PM Kisan மந்தன் யோஜனா – விவசாயிகளின் ஓய்வூதிய திட்டம்

விவசாயிகள் வயோதிக காலத்தில் அவர்களது 60 வயதுக்கு பிறகு மாதாமாதம் ரூ.3000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். இத்திட்டத்தில் சேருவதற்கு வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்கவேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்தது முதல் 60 வயது அடையும் வரை மாதம் ரூ.55 முதல் 200 வரை ஓய்வூதிய நிதிக்காக செலுத்தி வரவேண்டும். மத்திய அரசும் அதே சம பங்களிப்பை அளிக்கும். அதேபோல் சிறு குறு விவசாயிகளின் வாழ்க்கை துணைவர்களும் இதில் தனியாக இணைந்து கொள்ளலாம். அவர்களும் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்.

PM Kisan கிரெடிட் கார்டு –

விவசாயிகள் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில் PM கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் மலிவு வட்டி விகிதத்தில் விவசாயிகள் முன்பணம் எடுத்துக்கொள்ளலாம்.

PM Kisan ID கார்டு –

PM கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகள் பற்றி பதியப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு PM கிசான் ID கார்டுகள் வழங்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தகுதியுள்ள விவசாயிகள் மட்டுமே மாநிலத் திட்டங்களில் உள்ள பலன்களை பெற முடியும் என்றும் தெரிகிறது.