கடந்த மாதத்திலிருந்து பெட்ரோல்,டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது.

இது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மறுதினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தொடச்சியாக பொது மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது வசூல் செய்யும் கலால் வரியைக் குறைக்கும்படியும் கேட்டு வருகின்றனர்


இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று டில்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியி பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் முன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பெட்ரோல் டீசல் விலையில் ஏற்றம் எதுவும் செய்யாமல், உற்பத்தி செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஈடுகட்ட வேண்டி பொதுத்துறை எண்ணெய் நிறுவனகளுக்கு எண்ணெய் பத்திரங்களை அளித்திருந்தனர். அவ்வாறு வழங்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களினால் ஏற்பட்ட நிதிச்சுமையானது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது 2.5 லட்சம் கோடியாக இருந்தது.


ஒரு வேளை இந்த நிதிச்சுமை இல்லாமல் இருந்திருந்தால் இப்போது பெட்ரோல் டீசல் மீது வசூல் செய்யும் கலால் வரியை நீக்க ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் முந்தைய அரசு எண்ணெய் பத்திரங்களை அளித்து எங்கள் அரசுக்கு மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி விட்டனர்.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு வட்டியாக ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் செலுத்தியுள்ளது. இன்னமும் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது என்று கூறியுள்ளார்.