பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டு போன்றவற்றில் முதலீடு செய்வது குறித்த திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு SEBI-ல் பதிவு செய்துள்ள தொழில் வல்லுநர்கள் பலரும் செய்த ஆராய்ச்சியில் உருவானதே Paytm வெல்த் பாஸ்கட். இது குறுகிய மற்றும் நீண்ட கால முதலீடு செய்வதற்கு தகுந்த யோசனை அளித்து உதவும் என்று கூறப்படுகிறது.

பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் பல விஷயங்களையும் அலசி ஆராய வேண்டி உள்ளது. இது அவர்களுக்கு நேரச்சுமையை தருவதோடு சரியான புரிதல் இல்லாத நிலையை கூட உருவாக்கும். இது அனைத்திற்கும் தீர்வாக அமைந்துள்ளது இந்த வெல்த் பாஸ்கெட். இதை உருவாக்கியுள்ள அனைவரும் இத்துறையில் வல்லுநர்கள் என்பதால் கவனமாக பல்வேறு ஆராய்ச்சிகளையும், பல நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களையும், அவற்றின் சந்தை நிலவரங்களையும் அறிந்து இதில் தகவல்  தெரிவித்துள்ளனர்.

இந்த பாஸ்கெட்டில் உள்ள  அனைத்து  விவரங்களும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு கவனமாக கொடுக்கப்படுவதால் முதலீட்டாளர்கள் எவ்வித கவலையும் இன்றி இருக்கலாம்.

இது முற்றிலும் வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்கும். பயனீட்டாளர்கள் Demat கணக்கில் அவர்கள் வைத்திருக்கும் பங்குகள் பற்றிய விவரங்கள் தெளிவாக இருக்கும். மேலும் எந்தவொரு குறிப்பிட்ட பங்கிலிருந்து வெளியேற விரும்பினாலும் ஒருவர் எப்போது வேண்டுமாயினும் வெளியேறும் வசதி உள்ளது. வெல்த் பாஸ்கெட் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க வேண்டுமானால் முற்றிலும் இலவசமாக அதை முயற்சித்து கூட பார்க்க முடியும்.