2020 மார்ச் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததற்குப் பிறகு ஆன்லைன் வத்தகம் உலகளவில் மிக அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 140 – மில்லியன்களை எட்டியுள்ளது என்று அறியப்படுகிறது.

இந்த ஆன்லைன் வர்த்தக சந்தையில் நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமானது இரு நிறுவனங்கள் Flipkart மற்றும் Amazon. தற்போது இரண்டு முக்கிய பெரும் நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளனர் – “Reliance” மற்றும் “TATA” குழுமம்.

சந்தை நிலவரக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் வாடிக்கையர்ளகளிடையே மோகம் அதிகரித்துள்ளது. விளம்பரங்கள், கவர்ச்சியான தள்ளுபடிகள், பண்டிகை மற்றும் விழாக்கால சலுகைகள், பல்வேறு விதமான புத்தம்புதிய வரவுகளையும் கையகல கைபேசி மற்றும் கணினியில் கண்டுகொள்ள முடிதல், பொருட்களை ஒப்பீட்டு செய்து பார்க்கும் வசதி, வீட்டிலேயே டெலிவரி, எளிதாக மாற்றிக்கொள்ள அல்லது திருப்பி அனுப்பும் வசதி இவ்வாறு பல்வேறு வசதிகளைக் கொண்டதாக உள்ளதால் அனைவரும் ஆன்லைன் வாடிக்கையாளர்களாக இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்

நமது நாட்டில் ஆன்லைன் வர்த்தக சந்தையின் மதிப்பு இன்னும் 5 வருடங்களில் 25-30 % உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயின் & கம்பெனியின் ஆய்வின்படி ஒவ்வொரு புதிய 5 வாடிக்கையளர்களில் 4 பேர் இந்தியாவின் சிறு நகரங்களில் இருந்தே வருகின்றனர். ஆகவே மேற்படி கூறப்பட்டுள்ள மதிப்பீட்டில் சிறுநகரவாசிகளின் பங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆன்லைன் வாடிக்கையாளர்களை அதிக அளவில் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. அவ்வாறாக ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டில் 140 மில்லியன்களை தொட்டுள்ளது என்கிறது கணக்கீடு. கடந்த 2020-21 நிதியாண்டில் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக மொத்த சில்லறை வர்த்தக சந்தை மதிப்பு 5 சதவீதமாக சுருங்கியபோதிலும் கூட ஆன்லைன் மூலம் ஏற்பட்ட வர்த்தகம் 25 % எழுச்சியடைந்து சுமார் 38 பில்லியன் டாலார்களை எட்டியது என்று தெரியவருகிறது.