பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை  சமீபத்தில் சந்தித்துப்  பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் அந்தந்த மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் “ஒரு மாவட்டம் ஒரே திட்டம் (One District One Product)” என்ற திட்டத்தை செயல்படுத்தமுடியும் என்று கூறினார்.

மேலும் வங்கிகள் யாவும் ஏற்றுமதி அபிவிருத்தி முகவர்கள், சேம்பர் ஆஃப் காமர்ஸ்  ஆகியோருடன் தொடர்பு கொண்டு இது பற்றி அவர்களுக்கு புரிதல் ஏற்படுத்தும்படியும் ஏற்றுமதியாளர்களின் தேவை என்னவென்று அறிந்து தெரிவிக்கவும் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்றுமதியாளர்கள் சிறந்த சலுகைகளை தேடி ஒன்றிலிருந்து இன்னொரு வங்கிக்கு செல்லும் தேவை இருக்காது என்று அவர் கூறினார்.