Milk Business Ideas -பாலை கொள்முதல் செய்து விற்பனை செய்து எவ்வாறு இலாபம் பார்ப்பது என்பது குறித்து ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.
சரி, பால் விற்பனையை எப்படி துவங்கலாம்?
பால் விற்பனையை பொறுத்தவரை நீங்கள் லோக்கலாகவும் செய்யலாம், மிகப்பெரிய அளவிலும் செய்யலாம், இரண்டுமே நல்ல இலாபம் தரும், லோக்கலாக செய்ய வேண்டுமானால் ஒரு பால் பண்ணை மட்டும் வைத்தால் போதும், குறைந்த பட்சம் 10,000 ரூபாய் மட்டுமே செலவாகும், பால்பண்ணை என சிறிதளவில் வைக்கும் போது ஒரு 50 லிட்டர் கொள்முதல் செய்ய முடிந்தால் நீங்கள் தினசரி 800 முதல் 1,000 வரை அதில் இலாபம் ஈட்ட முடியும். மாதத்திற்கு பெரிய முதலீடு ஏதும் இல்லாமலே 25,000 முதல் 30,000 வரை சம்பாதிக்க முடியும்.
சரி, மிகப்பெரிய அளவில் செய்வது எப்படி?
மிகப்பெரிய அளவில் செய்ய வேண்டுமானால், குறைந்தது ஒரு ஐந்து இலட்சம் முதலீடு செய்வது அவசியம் ஆகிறது, நீங்கள் செய்யும் முதலீடு என்பது பால் கேன், ஏர் கண்டிசன் வசதி, உங்கள் நிறுவனத்தை பதிவு செய்வது, உங்கள் பால் விற்பனைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்திற்கு கொடுக்கும் டெபாசிட் இதற்காக மட்டும் தான்.
முதலில் பாலை கொள்முதல் செய்து சேகரித்து வைத்துக் கொள்வதற்கு ஏர்கண்டிசன் வசதியுடன் ஒரு குடோனை ரெடி செய்வது அவசியம், , அந்த பால் விற்பனை குடோனை மாநகராட்சியில் பதிவு செய்து உரிமம் வாங்கி கொள்ள வேண்டும், பால் விற்பனைக்கும் முறையாக உணவு பாதுகாப்பு துறையில் தரச்சான்றிதழ் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
கிராமங்கள் அதிகமாக இருக்கும் ஊரின் மையத்தில் பால் குடோன் இருப்பது மிக மிக அவசியம், முதலில் பால் கொள்முதல் கம்மியாக தான் வரும், நீங்கள் பால் பண்ணைகளை விட ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் கூட வைத்து எடுக்கும் போது பால் விற்பனையாளர்கள், பாலை கறந்து உங்களிடமே நேரடியாக வந்து கொடுப்பர், பின்னர் பாலை கொள்முதல் செய்யும் பிரபல நிறுவனங்களிடையே ஒரு குறிப்பிட்ட டெபாசிட் கொடுத்து அவர்களுடன் டை அப் வைத்துக் கொண்டால், அவர்களே உங்களது இடத்திற்கே வந்து பாலை கொள்முதல் செய்து, தினசரி உங்களது பால் தமிழகம் முழுக்க கொண்டு செல்லும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு ஒரு 250 லிட்டர் கொள்முதல் செய்ய முடிந்தால் மட்டுமே, மாதத்திற்கு மூன்று இலட்சங்கள் வரை சம்பாதிக்க முடியும், அதில் இலாபம் மட்டுமே ஒரு இலட்சத்திற்கு மேல் கையில் நிச்சயம் இருக்கும், தினம் ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள், எல்லாம் உங்களது திறமையும், திறமையால் வாடிக்கையாளர்களை ஆட்கொள்வதும் மட்டும் தான் இத்தொழிலில் மிக மிக அவசியம்.