Komaki X One Ace - Range 150+ ல, விலையும் கம்மியா, ஒரு ஸ்மார்ட் பைக் வேணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த தொகுப்பினை முழுமையா படிங்க.
Komaki X One Ace - பிரபல ஜப்பானிய நிறுவனம் ஆன கோமாகி, இந்தியாவில் டெல்லியின் மையத்தில் ஒரு பிளாண்ட் ஒன்றை அமைத்து எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது, முழுக்க முழுக்க இந்திய நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது, தயாரிப்பு இங்கு என்றாலும் பார்ட்ஸ்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, இவர்களது எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் எளிய மக்களும் வாங்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன, 35,000 முதல் 60,000 ரூபாய் வரை ஒரு சில குறிப்பிட்ட ரக எலக்ட்ரிக் பைக்குகளை இவர்கள் சந்தைப்படுத்தி வருகின்றனர். வருடத்திற்கு 60,000+ பைக்குகளை தயாரித்து ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Komaki X One Ace Specifications
1) LiPO4 வகை பேட்டரி, கெபாசிட்டி 2.2 KW வரை கொண்டது,
2) ஒரு சார்ஜ்க்கு 150+ KM பயணம் மேற்கொள்ள முடியும்,
3) பேட்டரி சார்ஜ் ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் 4-5 மணி நேரம்
4) பேட்டரி, மோட்டார், கண்ட்ரோலர் என மூன்றுக்கும் மூன்று வருட வாரண்டி அளிக்கப்படுகிறது,
5) பேட்டரியின் ஹெல்த்தை அறிந்து கொள்ள பிரத்யேக செயலி கொடுக்கப்படுகிறது,
6) ரிமோட் லாக், ரிவர்ஸ் பட்டன், AntiTheftLock உள்ளிட்ட வசதிகளும் உண்டு,
7) மொபைல் சார்ஜிங் பாயிண்ட் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது,
8) Eco, Sport, Turbo என 3 கியர் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன,
9) வண்டியுடன் சார்ஜர், ஹெல்மெட், Rain Guard உள்ளிட்ட 3,500 ரூபாய் மதிப்பிலான பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
" 150 கி.மீ ரேஞ்ச் இருக்கிறதே வண்டியின் விலை 1 இலட்சத்தை தாண்டுமோ என்றால், அதெல்லாம் இல்லை, விலை 59,999 ரூபாய் மட்டும் தான், தற்போது தீபாவளி ஆபர் என கூட ஒரு 2000 ரூபாயை கழிக்கவும் செய்கிறார்கள், முந்துங்கள் "