Biryani Business Profit-மாநகரத்தின் மையத்தில், ஒரு தள்ளுவண்டி கடை போட்டு, சூடான சுவையான பிரியாணி மட்டும் வைத்து விற்பதன் மூலம், ஒரு 4 மணி நேரத்தில் ரூ 1500 இலாபம் ஈட்ட முடியும்.
பொதுவாக பிரியாணி என்பது அனைவரின் விருப்ப உணவாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நாளில் ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் உணவு வகை கூட பிரியாணி தான். காலம் நேரம் பார்க்காமல் எந்த நேரத்திலும் பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் உண்டு, ஆனால் அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யப்படுவது என்பது மதிய நேரத்தில் தான். சரி இந்த பிரியாணி கடையை தள்ளுவண்டியில் வைப்பதன் மூலம் பெரிதாக இலாபம் பார்க்க முடியுமா என்றால் ஆம், நிச்சயமாக முடியும். அதற்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதலில் இடத்தை தெரிவு செய்ய வேண்டும், மாநகரின் மையமாக அந்த இடம் இருந்தால், அது இன்னும் சூப்பர், பிரியாணியை பொறுத்த வரை சுவை இருக்க வேண்டும், சுவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே அடுத்து அடுத்து வாடிக்கையாளர்கள் கடையை தேடி வருவார்கள், சுவையான பிரியாணி, சூடாக இருக்க வேண்டும், கத்தரிக்கா பச்சடி, தயிர் வெங்காயம் ஆகிய்வற்றுடன் இணைத்து பிரியாணி சாப்பிட வேண்டும் என்றே பலரும் ஆசைப்படுவார்கள், ஆதலால் அதையும் செய்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. மதிய நேரம் 12 மணிக்கு தள்ளு வண்டியில் பிரியாணி இருக்க வேண்டும். ஒரு பார்சல் 100 ரூபாய் என வைத்துக் கொண்டால், தரமாக தயாரிக்கும் பட்சத்தில் அசல் ஒரு 65 ரூபாய் வந்து விடும். ஒரு நாளைக்கு 50 பார்சல் விற்றால் கூட, குறைந்த பட்சம் ரூபாய் 1,500 இலாபத்துடன் 4 மணிக்கு வீட்டுக்கே வந்து விடலாம்.
“ உணவு என்பது தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சாரத்திற்குள் ஒன்றாகி விட்டது, அதுவும் பிரியாணி எல்லாம் குடும்பத்திற்குள் ஒரு அங்கம் என்றே சொல்லி விடலாம், உங்களுக்கு சுவையான பிரியாணி செய்ய தெரியும் என்றால் தைரியமாக பிரியாணி கடை போட்டு பார்க்கலாம் “