Onion Shop Business Ideas Tamil - தமிழ்நாடு வெங்காய உற்பத்தியில் இந்தியாவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது, வெங்காயம் குறைந்த கால சாகுபடியில் நிறைய இலாபம் தரவல்லது, பொதுவாக பல்லாரி, சின்ன வெங்காயம் இரண்டும் தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிகமாக விளைகிறது, மொத்த விற்பனை செய்ய நினைப்பவர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் இந்த ஏதாவது ஒரு மாவட்டத்தில் நேரடியாக சென்று கொள்முதல் செய்து கொள்ளலாம்.
சரி, எவ்வளவு முதலீடு?
கடை உங்களிடம் இருக்கும் பட்சத்தில் மொத்தமாக ஒரு 50,000 ரூபாய் மட்டும் இருந்தால் சரக்குகளை ஏற்றி கடையை துவங்கி விடலாம், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஏதாவது வெங்காய விவசாய பகுதிகளுக்கு சென்று ஒரு 5 நாளுக்கு ஒரு முறை 15 மூடை பல்லாரி, ஒரு 5 மூடை சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒரு மூடை 50 கிலோ அளவில் இருக்கும், நேரடி கொள்முதல் என்னும் போது பல்லாரி உங்களுக்கு கிலோ 30 ரூபாய்க்கு தருவார்கள், சின்ன வெங்காயம் ரூ 40 முதல் 45 வரையிலும் தருவார்கள்.
மொத்தமாக 15 மூடை பல்லாரி விலை ரூ 22,500 வரும், 5 மூடை சின்ன வெங்காயம் ஒரு 10,000 ரூபாய் வரும், ஒரு 32,000 முதல் 35,000 ரூபாய் வரை இருந்தால் சரக்குகளை கடைக்குள் இறக்கி விடலாம், மீதி இருக்கும் ரூபாயை கடை அட்வான்ஸ், நகராட்சி அல்லது பஞ்சாயத்து லைசென்ஸ் உள்ளிட்டவைகளுக்கு வைத்துக் கொள்ளலாம், எவ்வளவு பார்த்தாலும் முதலீடு 50,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை தாண்டாது.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
5 நாளுக்கு ஒரு முறை மொத்தமாக சரக்குகளை கொள்முதல் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அந்த 5 நாள்களுக்கான இலாபத்தை முதலில் கணக்கீடு செய்வோம், பொதுவாக சந்தைகளில் பல்லாரி கிலோ 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது, மொத்த கடை என்னும் போது நீங்கள் சில்லறைக்கு கிலோ 50 ரூபாய்க்கும், மூடையாக கிலோ 40 ரூபாய்க்கும் விற்கலாம், சில்லறையாக கிலோ ரூ 50 ரூபாய்க்கு 5 நாட்களில் 5 மூடை விற்கும் பட்சத்தில் ரூ 12,500 வருமானம் கிடைக்கும். மொத்த விலைக்கு கிலோ 40 ரூபாய் வீதம் 10 மூடைகளை விற்கும் போது அதில் ஒரு ரூ 20,000 வருமானம் இருக்கும்.
சின்ன வெங்காயம் கிலோ ரூ 80 ரூபாய் வரை சந்தைகளில் விற்கிறார்கள், நீங்கள் சில்லறை விலைக்கு ரூ 70 வரை விற்கலாம், மொத்த விலைக்கு ரூ 60 வரை விற்கலாம், 5 நாட்களில் 3 மூடை மொத்த விலைக்கு விற்கும் பட்சத்தில் ரூ 9000 வரை வருமானம் இருக்கும், 2 மூடை சில்லறை விலைக்கு விற்கிறீர்கள் என்றால் ரூ 7000 வ்ரை வருமானம் இருக்கும். மொத்தமாக 5 நாளுக்கான வருமானம் மட்டும் ரூ 48,500 ரூபாய், நீங்கள் சரக்கிற்காக செலவழித்தது 32,500 ரூபாய் கழிவுகள் சேர்த்து 35,000 ரூபாய் என வைத்தால் கூட 5 நாளுக்கு மட்டுமே ரூ 13,500 இலாபம் இருக்கும்.
“ ஒரு மாதத்திற்கு என்று கணக்கிட்டால் 2,90,000 ரூபாய் வருமானம் இருக்கும், அதில் இலாபம் மட்டும் தனியாக என்று கணக்கிட்டால் 81,000 ரூபாய் வரை இலாபம் இருக்கும், மொத்தத்தில் வெங்காய கடை நல்ல இலாபம் தரக்கூடிய தொழில் தான் "