• India

கல்பனா சரோஜ், இந்தியாவின் முதல் பெண் தொழிலதிபர், தி ரியல் ஸ்லம்டாக் மில்லியனர்!

Kalpana Saroj: Slumgirl To India's First Business Woman - தி ரியல் ஸ்லம்டாக் மில்லியனர் ஆக அறியப்படும், இந்தியாவின் முதல் பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர் கல்பனா சரோஜ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kalpana Saroj: Slumgirl To India's First Business Women

Kalpana Saroj: Slumgirl To India's First Business Women - 1961 இல் மஹாராஷ்டிராவில் ரோபகெர்டா கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர் தான் கல்பனா சரோஜ், படிப்பில் மிகவும் கெட்டி, ஆனாலும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் பள்ளிகளிலேயே நிறைய துன்புறுத்துதல்களுக்கும், கேலி, கிண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார், ஆசியர்களே ஒரு சந்தேகம் கேட்டால் இவரை மதிக்க மாட்டார்களாம், நண்பர்களுடன் இணைந்து விளையாடினால் அவர்களின் பெற்றோர்கள் பிடித்து இழுத்துவிட்டு சென்று விடுவார்களாம்.

வீட்டில் மூத்த பிள்ளை, 7 ஆவது படித்துக் கொண்டு இருக்கும் போதே வீட்டில் திருமண பேச்சு வார்த்தை, 12 வயதில் திருமணம், அங்கிருந்து ஒரு சேரிப்பகுதியில் குடிசையில் குடியேறிய கல்பனா சரோஜ்க்கு அங்கு நிம்மதியான வாழ்க்கை இல்லை, கணவனிடம் கொச்சை கொச்சையாக திட்டுக்களை வாங்கிக் கொண்டு மேற்கொண்டு அடித்து துன்புறுத்தியதை எல்லாம் ஒரு 6 மாதம் தான் அந்த பிஞ்சு குழந்தையால் சகித்துக் கொள்ள முடிந்தது.


அதற்கு பின்னர் அப்பாவுடன் சொந்த கிராமத்திற்கு வந்த கல்பனா சரோஜ், அங்கும் அவருடைய கிராமத்து மக்களாலும் தொடர்ந்து சபிக்கப்பட்டார், இழிவு படுத்தப்பட்டார், இது சரிவராது என்று அங்கிருந்து கிளம்பி தனது சொந்த மாமா ஒருவரின் வீட்டில் தங்கி 2 ரூபாய் சம்பளத்தில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் தையல் பணியாளராக சேர்ந்தார், அங்கிருந்து தையல் கற்றுக் கொண்டு தையலில் மாஸ்டர் ஆனார், பின்னர் தனியாக ஒரு தையல் கம்பெனி ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தன் பொருளாதாரத்தை பலப்படுத்தினார்.

ஆனால் அவர் நினைத்த அளவிற்கு அவரால் அதில் வருமானம் ஈட்ட முடியவில்லை, இடையில் அவரது அக்கா உடல்நலக்குறைவால் மருத்துவ செலவிற்கு காசு இல்லாமல் இறந்து போனது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அப்போது தான் அவருக்கு பணத்தின் அருமை புரிந்தது, இந்த  சரிவராது என்று அடுத்த கட்ட தொழிலுக்கு முன்னேற நினைத்தார், மத்திய அரசின் தொழில் முனைவோர்களுக்கான கடனை வங்கியின் மூலம் பெற்றார்.


 

ஆகப்பெரும் நட்டத்தில் ஓடிக் கொண்டு இருந்த காமணி ட்யூப்ஸ் என்ற நிறுவனத்தை தன் வசப்படுத்தினார், கிட்டதட்ட மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் பணி புரிந்து வந்த அந்த நிறுவனத்தை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட சில காலங்களிலேயே இலாபங்களை நோக்கி நகர வைத்தார், அன்று அவரை அவமதித்த ஒவ்வொருவரும் இன்று சமூகத்தில் சல்யூட் அடிக்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார், இரண்டு ரூபாய் சம்பளத்தில் தன் வாழ்வை ஆரம்பித்த கல்பனா சரோஜ், காமணி ட்யூப்ஸ் நிறுவனத்தை தன்வசப்படுத்தி அதன் வருமானத்தை ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தினார்.

" 2006 யில் சிறந்த பெண் தொழில் அதிபருக்கான ராஜீவ் காந்தி விருது, 2013 யில் பத்ம ஸ்ரீ விருது என்று தேசத்தில் பெண் தொழில் முனைவோர்களுக்கான முதல் விதையை விதைத்து இன்று அதன் மூலம் அவரைப் போல பலரை உருவாக்கி இருக்கிறார் "

You can share this post!