Tamil Nadu Grama Bank FD Schemes - தமிழ்நாடு கிராம வங்கி என்பது சேலத்தை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுக்க செயல்படும் ஒரு ஊரக வங்கி ஆகும், முதலில் பாண்டியன் வங்கி என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த வங்கி தற்போது தமிழ்நாடு கிராம வங்கி என்ற பெயரில் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியுடன் இணைந்து சார்புடைய வங்கியாக தமிழ்நாடு கிராம வங்கி இயங்கி வருகிறது.
பொதுவாக கிராமப்புறத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு சேவிங் ஸ்கீம்கள் போஸ்ட் ஆபிஸ் தவிர எதிலும் கிடைப்பதில்லை, ஆனாலும் போஸ்ட் ஆபீஸ்களில் சேவிங் ஸ்கீவ் துவங்க முடிந்தாலும் பணம் எடுப்பதற்கோ போடுவதற்கோ ஒரு சில சிரமங்கள் இருக்கின்றன, பெரிய பெரிய பொதுத்துறை வங்கிகளும் கிராமங்களில் இருப்பதில்லை.
இதனை கருத்தில் கொண்டே ஊரக வங்கியாக அறியப்படும் தமிழ்நாடு கிராம வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான வட்டி விகிதங்களுடன் பிக்ஸ்டு டெபாசிட்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது, பெரும்பாலான கிராமங்களில் ஊரக வங்கி செயல்பட்டு வருவதால் நிச்சயம் அவர்களுக்கு கிராம வங்கியின் சேமிப்பு திட்டம் என்பது மிக மிக பயனுள்ளதாக அமையும்.
சரி அப்படி என்ன பிக்ஸடு டெபாசிட் ஸ்கீம்?
அமுத சுரபி என்ற பெயரில் தமிழ்நாடு கிராம வங்கிகளில் செயல்பட்டு வரும் பிக்ஸடு டெபாசிட் ஸ்கீமில் மூத்த குடிமக்களுக்கு 8.05 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது, அதே சமயத்தில் மூத்த குடிமக்கள் அல்லாதோருக்கும் 7.55 சதவிகிதம் வரை இத்திட்டத்தில் வட்டி வழங்கப்படுகிறது, கிராமப்புறத்தில் இருப்பவர்கள் ஒரு நல்ல சேவிங் ஸ்கீமை தேடிக் கொண்டு இருக்கையில் அமுத சுரபி என்ற அட்டகாசமான பிக்ஸடு டெபாசி ஸ்கீமை அறிமுகப்படுத்தி இருக்கிறது தமிழ்நாடு கிராம வங்கி.