MSME – சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டுக்காக சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) ரூ.524 கோடி நிதி உதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை இவ்வங்கி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவசுப்பிரமணியன் ராமன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வழங்கினார்.

SIDBI தொகுதி மேம்பாட்டு நிதியை பெறப்போகும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கிளஸ்டர், கோயம்பத்தூரில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்கள் பாகங்கள் உற்பத்தி செய்யும் கிளஸ்டர், ஓசூர் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க 20 MLD TRO திட்டம், ஓரகடத்தில் மருத்துவ உபகரணங்கள் பூங்கா, அம்பத்தூர் மற்றும் கோயம்பத்தூரில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயல்படுத்தப்படும்.

மாநில அரசு சிறு குறு நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்தவும், புதிய தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் வேண்டிய கடன் உதவியையும் இந்த திட்டத்தின் கீழ் SIDBI வழங்கும் எனவும் கூறியுள்ளனர்