தொலைதொடர்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக கோலோச்சியிருக்கும் ஜியோ செப் 1 முதல் புதிய 5 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.ரூபாய் 499 முதல் ரூபாய் 2599 வரையில் இத்திட்டங்கள் கிடைக்கும்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் – 4G வேகம், 3GB டேட்டா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல், வாய்ஸ் கால் சேவை, இலவச SMS.ரூபாய் 499 திட்டத்தில் – தினசரி 3GB டேட்டா, வேலிடிட்டி 28 நாட்கள், எல்லைகளில்லாத வாய்ஸ் கால்கள், 100 இலவச SMS, JIO டிவி, JIO சினிமா.

ரூபாய் 666 திட்டத்தில் – தினசரி 2GB டேட்டா, வேலிடிட்டி 56 நாட்கள், வாய்ஸ் கால்கள், இலவச SMS, JIO டிவி, JIO சினிமா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் ரூபாய் 888 திட்டத்தில் – தினசரி 2GB டேட்டா, வேலிடிட்டி 84 நாட்கள், எல்லைகளில்லாத வாய்ஸ் கால்கள், 100 இலவச SMS, JIO டிவி, JIO சினிமா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் ரூபாய் 2599 திட்டத்தில் – தினசரி 2GB டேட்டா, வேலிடிட்டி 365 நாட்கள், எல்லைகளில்லாத வாய்ஸ் கால்கள், 100 இலவச SMS, JIO டிவி, JIO சினிமா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் 499 ரூபாய் ஒரு வருட மொபைல் திட்டத்தில் 720p தரமான வீடியோக்களை பெற முடியும்.

டிவி மற்றும் மடிக்கணினியில் இந்த இணைப்பை பெறமுடியாது. இதன் சூப்பர் திட்டத்திற்கு கட்டணம் ரூபாய் 899. விடியோக்கள் தரம் 1080p ஆக இருக்கும். இந்த இணைப்பை டிவி மற்றும் மடிக்கணினியில் இணைக்கலாம்.இதில் 2 இணைப்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.இதே ப்ரீமியம் திட்டத்தை ரூபாய் 1499 வருட கட்டணம் செலுத்தி 4 இணைப்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.

4K அளவுக்கு வீடியோவின் தரத்தை பெற்றிருக்கும். டிவி அல்லது லேப்டாப்பிலும் இணைக்க முடியும். முக்கியமானது விளையாட்டு தொடர்பான விளம்பரங்கள் தவிர வேறு விளம்பரங்கள் இடம்பெறாது