இஸ்கான் அமைப்பின் நிறுவனர் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு 125 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செப் 1-ம் தேதி வெளியிட்டார்.

பகவான் கிருஷ்ணருக்கான சர்வதேச தொண்டு அமைப்பை நிறுவியவர் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா. 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அவரது பிறந்த தினமாகும். ஆக, நேற்று அவருக்கு 125-வது பிறந்த தினம். அந்நாளை ஒட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

இந்த ஏற்பாடு காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இஸ்கான் அமைப்பின் தலைவர் கோபால கிருஷ்ண கோசுவாமி மஹாராஜ் அவர்களும் பல்வேறு இஸ்கான் கோயில்களில் இருந்து ஏராளமானோரும் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது உரையில் “சுவாமி பிரபுபாதா ஒரு தெய்வீகமான ஸ்ரீ கிருஷ்ண பக்தர் என்றும் பாராட்டப்பட வேண்டிய தேச பக்தர்” என்றும் குறிப்பிட்டார்.

இவர் நம் நாட்டின் சுதந்திரத்திற்கு போராடினார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார். மேலும் அவர் தான் பயின்ற ஸ்காட்டிஷ் கல்லூரியிடமிருந்து டிப்ளமோ சான்றிதழ் பெறுவதை மறுத்தார்