பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றாகிய ICICI சில வாரங்களுக்கு முன் நிரந்தர வைப்பு நிதிகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை மாற்றியமைத்தது.அதை தொடர்ந்து 2022-ம் ஆண்டு (ஜனவரி 1) முதல் நாள் முதல் சில சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த இருப்பதாக இப்போது அறிவிப்புகள் வந்துள்ளன.

இப்போது ICICI-ன் ATM மையங்களில் எடுக்கப்படும் பணத்திற்கு, முதல் 5 பணப்பரிவர்தனைகள் கட்டணமில்லாமல் செய்யலாம். அதற்கடுத்து ஒவ்வொரு முறை எடுக்கப்படும் பணத்திற்கும் ரூ.20/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது ஜனவரி 1 முதல் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21/- ஆகும் எனத்தெரிகிறது.

CICI தவிர மற்ற வங்கி ATM மையங்களில் முதல் மூன்று முறை பணம் எடுக்கும்போது கட்டணம் இல்லை (இது மெட்ரோ நகரங்களில் மட்டும்). அதற்கு அடுத்து எடுக்கும் பணத்திற்கு சேவை கட்டணம் ரூ.20ம், நிதி சாரா பரிவர்த்தனைகளை ரூ.8.50-ம் வசூல் செய்யப்படுகிறது. அந்த சேவை கட்டணம் இனிமேல் ரூ.21/- அதிகரிக்கும். நிதி சாரா பரிவர்த்தனைகள் கட்டண உயர்வு ஏதும் இல்லை.

இது தவிர பிற நிதிசாரா பணப்பரிவர்த்தனைகள் அதாவது கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்வது, மினி ஸ்டேட்மெண்ட்கள், கடவு எண்ணை மாற்றுதல் போன்றவற்றிற்கு கட்டணம் ஏதும் இல்லை.