நாட்டில் அதிக அளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் துறை என்ற சிறப்பைப் பெற்றது ஜவுளித்துறை.
கைத்தறித்துறையை ஊக்குவிக்கும் விதத்திலும் அடுத்த 3 வருடங்களில் ஏற்றுமதியை நான்கு மடங்காக உயர்த்தும் உன்னத நோக்கிலும் நமது மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் எட்டுபேர் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டி, பேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் சுனில் சேத்தி அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. இது தேவையான விவரங்களை சேகரித்து திட்டமிடலுடன் கூடிய இறுதி அறிக்கையை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது.
இந்த கமிட்டி கைத்தறி உற்பத்தியை இரட்டிப்பாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் தேவைப்படும் அனைத்து திட்டங்களை வடிவமைக்கும்.
ஜவுளி அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் அமைக்கப்பட்ட இந்த கமிட்டியின் இலக்காக கைத்தறி உற்பத்தி ரூ.60000 கோடியிலிருந்து ரூ1.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஏற்றுமதி ரூ.2500 கோடியிலிருந்து ரூ.10000 கோடியாக அடுத்த மூன்று ஆண்டுகளில் உயரும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிடப்பட்டது.
மேலும் கைத்தறி நெசவாளர்கள் ஏஜென்சீஸ்-ஐ வடிவமைப்பாளர்கள், கொள்முதல் நிறுவனங்கள், ஏற்றுமதி அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த கமிட்டி முன்னெடுக்கவேண்டும். பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், கடன் உதவி, தொழில்நுட்ப மேம்பாடு, திறன்மேம்பாடு மற்றும் வடிவமைப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் இந்த கமிட்டி வகுக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தப்பட்ட பூர்வாங்க பரிந்துரைகளை இந்த கமிட்டி 30 நாட்களுக்குள்ளும் இறுதி அறிக்கையை 45 நாட்களுக்குள்ளும் இந்த கமிட்டி சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source :