GST வரி அமலுக்கு வந்ததிலிருந்தே பல மாறுதல்கள் அவ்வப்போது நாடெங்கிலும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளை இணைப்பில் கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி இன்ஜினியரிங், எம்.பி.ஏ., உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான சான்றிதழ் பெற மாணவர்கள் இனி கட்டாயம் GST கட்டுதல் வேண்டும்.

கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், பேராசிரியர்களின் பயிற்சி போன்ற அனைத்து பணிகளுக்கும் ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. பல்கலைக்கழக கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டபோது வரி வசூல் செய்ததற்குரிய கணக்கு எதுவும் அதில் குறிப்பிடவில்லை. ஆகவே தமிழக வணிக வரி துறை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

தமிழக உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைகழக இணைப்பில், 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குதல், தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குதல், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளுக்கு, கல்லுாரிகளிடமிருந்து அண்ணா பல்கலை கட்டணம் வசூலிக்கிறது.

2017-ம் ஆண்டு GST நடைமுறைக்கு வந்தது முதல் இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் GST எண் பெறப்படாததால் தற்போது அதற்குரிய பதிவு செய்யப்பட்டு GST எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு சேவைகளுக்கும் 2017 முதல் முறையாக GST வரி வசூலிக்கப்பட்டிருந்தால் இதுவரை ரூ.16 கோடி வரை வருவாய் கிடைத்திருக்கும். இது இப்போது இழப்பாகவே உள்ளது. ஆகவே இனியும் எவ்வித தாமதமும் இன்றி அனைத்து சேவைகளுக்கும் GST வசூலிக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் நேற்று அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்

  • இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மற்றும் இணைப்பு கல்லூரி மாணவர்கள் செலுத்தும் கட்டணம், பிற சேவைகள் ஆகிய அனைத்துக்கும் GST செலுத்த வேண்டும்.
  • பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு 18% GST கட்டணத்துடன் செலுத்துதல் வேண்டும்.
  • அசல் சான்றிதழ் இல்லாமல், பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் இவற்றின் duplicate சான்றிதழ், இடமாற்று (migration) சான்றிதழ்,
  • விடைத்தாள் நகல் பெற, சான்றிதழின் உண்மைத்தன்மை சரிபார்ப்பு ஆகிய அனைத்து சேவைகளுக்கும் 18% GST வரி வசூல் செய்யப்படும்.
  • இதில் சில கட்டணம் மற்றும் சேவைகளுக்கு GST விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – கல்வி கட்டணம், செமஸ்டர் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு, டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ், தர வரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ் ஆகியவை விலக்கு பெறுகின்றது.

மேற்படி சுற்றறிக்கை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் அனைத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.