துணிகள் மற்றும் ஆடைகளுக்கு GST வரி 12%ஆக உயர்த்தப்படவிருப்பது இத்துறையில் 85%க்கும் மேல் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அரசுகள் மற்றும் GST கவுன்சிலிடம் Retailers Association of India (RAI) கடந்த செவ்வாய் கிழமை வலியுறுத்தி உள்ளது.

இந்த அமைப்பின் CEO ராஜகோபாலன் கூறுகையில் “துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி தொழில் ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருப்பதால் GST வரி அதிகரிப்பு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இது பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். MSME தொழில் நிறுவங்களுக்கு மூலதனத்தையும் பாதிக்கும். 90% தொழில் நிறுவனங்கள் பாதிப்படையும். நுகர்வோர்களை பொறுத்த வரையில் ஆடைகளின் விலை உயரும். ஒழுங்கமைக்கப்படாத பல வணிக அமைப்புகள் GSTக்குள் வராமல் போக அரசாங்கம் வழிவகுக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த மிகப்பெரிய பாதிப்பிலிருந்து இத்துறைகள் தப்பிக்க மத்திய மாநில அரசுகள் மற்றும் GST கவுன்சில் இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று RAI கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இத்துறையின் சப்ளை செயினில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரி 5% GST வரி விதிக்கப்பட்டால் அது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் RAI கூறியுள்ளது .